(Source: ECI/ABP News/ABP Majha)
இமாச்சல் பிரதேசம் போறீங்களா? அதிக செலவில்லாமல் சுத்திப் பார்க்க 5 இடங்கள்!
கிழக்கே திபெத் நாட்டையும், மேற்கே பஞ்சாபையும், வடக்கே காஷ்மீரையும் தன் எல்லைகளாக கொண்டுள்ள 'தேவபூமி' இமாச்சலப் பிரதேசம்.
கிழக்கே திபெத் நாட்டையும், மேற்கே பஞ்சாபையும், வடக்கே காஷ்மீரையும் தன் எல்லைகளாக கொண்டுள்ள 'தேவபூமி' இமாச்சலப் பிரதேசம். இமாச்சல பிரதேசம் பசுமையான பள்ளத்தாக்குகள், கிறங்கடிக்கும் வெண்பனிச் சிகரங்கள், மனம் மயக்கும் ஏரிகள், பசும் புல் நிலங்கள் ஆகியவை இந்த எழில் கொஞ்சும் மாநிலத்தின் அம்சங்கள்.
கசோல்:
கசோல் என்பது வட இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள குல்லு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குக்கிராமம் ஆகும். பார்வதி ஆற்றின் கரையில் உள்ள பார்வதி பள்ளத்தாக்கில் மணிகரண் மற்றும் புண்டர் நகரங்களுக்கு நடுவில் இக்கிராமம் அமைந்திருக்கிறது. புண்டர் நகரத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் மணிகரண் நகரத்திலிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவிலும் கசோல் கிராமம் அமைந்துள்ளது. காசோல் கிராமம் இமயமலையை ஏறிவருபவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கிடமாகும். மற்றும் மலானா மற்றும் கீர்கங்கா போன்ற மலையேற்ற கிராமங்களுக்கு அருகிலுள்ள ஒரு தளமாகவும் இக்கிராம் உள்ளது. கிராமத்தின் வலுவான யூத வரலாறு மற்றும் மரபுகள் காரணமாக கசோலை இந்தியாவின் குட்டி இசுரேல் என அழைப்பர். கசோல் இமாச்சல பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கண்கவர் சுற்றுலா தலமாகும்.
குஃப்ரி:
குஃப்ரி என்னும் சிறிய நகரம் சிம்லாவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 2743 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள மக்கள் பேசும் மொழியில் 'ஏரி' என்று பொருள்படும் 'குஃப்ர்' எனும் வார்த்தையிலிருந்து குஃப்ரி என்ற பெயர் இந்த நகருக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. பல்வகையான அழகிய இடங்கள் இந்நகரத்தில் உள்ளதால், ஆண்டு முழுதும், சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் இங்கு வந்து செல்கின்றனர்.
மேக்லியோட்கஞ்ச்:
மேக்லியாட்கஞ்ச் (ஆங்கிலம்: McLeod Ganj) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலாவின் ஒரு புறநகர்ப் பகுதியாகும். திபெத்தியர்களின் அதிக மக்கள் தொகை இருப்பதால் இது "லிட்டில் லாசா" அல்லது "தசா" (முக்கியமாக திபெத்தியர்களால் பயன்படுத்தப்படும் தர்மசாலாவின் ஒரு குறுகிய வடிவம்) என்றும் அழைக்கப்படுகிறது. நாடுகடத்தப்பட்ட திபெத்திய மக்கள் அமைப்பின் தலைமையகம் மேக்லியோட் கஞ்ச் ஆகும்.
கசௌலி:
இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சோலான் மாவட்டத்தில், 1900 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்திய இராணுவப் பாசறை நகரம் ஆகும். 1842ல் கசௌலி பகுதியில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் படைத்துறை நகரத்தை நிறுவினர். இந்நகரம் சிம்லாவிலிருந்து 77 கிமீ தொலைவிலும்; சண்டிகரிலிருந்து 65 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. கசௌலி நகரத்தின் தொடருந்து நிலையம் 1927 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது.
தீர்தன் பள்ளத்தாக்கு:
இமாச்சல் பிரதேசத்தில் அதிக செலவில்லாமல் பயணிக்கக் கூடிய இன்னொரு சுற்றுலா தலம் தீர்தன் பள்ளத்தாக்கு. இங்கு செர்லோஸ்கர் ஏரி உள்ளது. இதன் எழில்மிகு காட்சி காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.