(Source: ECI/ABP News/ABP Majha)
கத்தாரில் கைதான ஹைதராபாத் நபர் வைத்திருந்தது போதைப் பொருளா? பாண்ட்ஸ் பவுடரா?
ஹைதராபாத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி வேலை தேடி கத்தார் சென்ற நிலையில் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி வேலை தேடி கத்தார் சென்ற நிலையில் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைதாகி இரண்டு மாதங்களாகிவிட்ட நிலையில் அவரது குடும்பத்தாரோ முகமது நவாஸ் என்ற அந்த இளைஞர் டிஸ்யூ பேப்பரில் டால்கம் பவுடரைத் தான் மடித்துவைத்திருந்தார் என்று கூறுகின்றனர்.
ஹைதராபாத் மாநிலத்தின் உப்புகுடா பகுதியைச் சேர்ந்தவர் முகமது நவாஸ். 28 வயதான எம்பிஏ பட்டதாரியான இவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளிடம் சிக்கினார். அவருடைய லேப்டாப் பையில் போதை மருந்தை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து பத்திரிகையில் வெளியான செய்தியில் நவாஸ், தான் டிஸ்யூ பேப்பரில் வெறும் டால்கம் பவுடரையே வைத்திருந்ததாகக் கூறினார். அந்தப் படவுரை பரிசோதனைக்கு அனுப்பியதாகக் கூறும் அதிகாரிகள் முடிவை வெளியிட மட்டும் தாமதப்படுத்துகின்றனர் என்று குற்றம்சாட்டுகிறார். 2021ல் தான் முகமது நவாஸ் முதன்முதலாக தோஹா சென்றுள்ளார். ஆனால் அங்கு பல மாதம் அலைந்து திரிந்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் அங்கிருந்து கத்தார் செல்ல திட்டமிட்டார். ஆனால் டிசம்பர் 11ல் அவரை சுங்கத்துறையின் தோஹாவில் கைது செய்தனர். அதிலிருந்தே நவாஸ் சிறையில் தான் இருக்கிறார்.
தெலங்கானா டுடே செய்தித் தாளில் இது தொடர்பான செய்திகள் வெளியாகின. நவாஸின் குடும்பத்தினர் திட்டவட்டமாக அவர் மீதான குற்றச்சாட்டை மறுக்கின்றனர். அவர் பாண்ட்ஸ் பவுடரை ஒரு பொட்டலத்தில் வைத்திருந்தனர் என்றே கூறுகின்றனர்.
இது குறித்து கத்தார் அரசு தரப்பில், கொரோனா தொற்று அதிகரித்ததால் ஆய்வுக்கூடங்கள் அனைத்துமே அதில் பரபரப்பாக இருப்பதால் நவாஸ் வைத்திருந்த சாம்பிளை சோதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையில் அடுத்த வாரம் கத்தாரில் உள்ள தெலுங்கான நல வாரிய வழக்கறிஞர்கள் கத்தார் தூதரக அதிகாரிகளை சந்தித்து இது குறித்துப் பேசவுள்ளனர்.
கத்தாரில் போதைப் பொருள் கடத்தலுக்கு என்ன தண்டனை?
கத்தார் நாட்டில் போதைப் பொருளை வைத்திருந்தாலோ, பயன்பட்டுத்தினாலோ கடத்தினாலோ கடுமையான தண்டனைகள் உண்டு. சில நேரங்களில் நாடுகடத்தப்படுவார்கள். சில நேரங்களில் மிக நீண்ட சிறைத் தண்டனை விதிக்கப்படும். மிகவும் அதிகமான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அபராதத் தொகையாக QR200,000 (கத்தாரி ரியால்) வரை அனுப்பப்படும். அதேபோல் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் குற்றத்தின் வீரியத்தைப் பொறுத்து மரண தண்டனை வரை விதிக்கப்படலாம்.
வளைகுடா நாடுகளில் போதைப் பொருள் கடத்தல் கொடுங் குற்றமாகக் கருதப்படுவதால் அங்கு தண்டனைகளும் மிகக் கடுமையாக இருக்கின்றன?
இந்நிலையில் தவறு செய்யவில்லை என்று கூறும் இந்திய இளைஞர் முகமது நவாஸுக்கு நீதி கிடைக்குமா? அடுத்த வாரம் தூதரக அதிகாரிகளுடன் தெலுங்கானா நல வாரிய வழக்கறிஞர்கள் மேற்கொள்ளவிருக்கும் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.