"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
இந்தியாவின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், எதிரி அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று இந்தியா உலகிற்குத் தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வங்காள மண்ணிலிருந்து, 140 கோடி இந்தியர்களின் சார்பாக சொல்கிறேன் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடில"
மேற்குவங்கம் மாநிலம் அலிபுர்துவாரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, பஹல்காமில் பயங்கரவாதிகள் செய்த காட்டுமிராண்டித்தனத்திற்குப் பிறகு மேற்கு வங்காளத்திலும் மக்கள் மத்தியில் மிகுந்த கோபம் ஏற்பட்டது.
உங்களுக்குள் இருந்த கோபத்தை நான் நன்றாகப் புரிந்துகொண்டேன். பயங்கரவாதிகள் நம் சகோதரிகளின் சிந்துரத்தை (குங்குமம்) துடைக்கும் துணிச்சலைக் கொண்டிருந்தனர். நம் ராணுவம் அவர்களுக்கு குங்குமத்தின் சக்தியை உணர்த்தியது" என்றார்.
அதிரடியாக பேசிய பிரதமர் மோடி:
கடந்த 2016ஆம் ஆண்டு, சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதலை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, "பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இப்போது இந்தியாவின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், எதிரி அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று இந்தியா உலகிற்குத் தெரிவித்துள்ளது. அதன் வீட்டிற்குள் நுழைந்து அவர்களை மூன்று முறை தாக்கியுள்ளோம் என்பதை பாகிஸ்தான் புரிந்து கொண்டுள்ளது.
பாகிஸ்தானே நினைத்துப் பார்க்காத அளவுக்கு எல்லை தாண்டி சென்று பயங்கரவாத உள்கட்டமைப்பை நாங்கள் அழித்துவிட்டோம். பாகிஸ்தானுக்குள் புகுந்து மூன்று முறை தாக்கியுள்ளோம்.
பயங்கரவாதத்திலும் படுகொலை செய்வதிலும் பாகிஸ்தான் ராணுவம் மிகப்பெரிய நிபுணத்துவம் பெற்றுள்ளது. பயங்கரவாதமும், படுகொலைகளும் பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய நிபுணத்துவம். போர் நடக்கும் போதெல்லாம், அவர்கள் தோல்வியை எதிர்கொள்கிறார்கள்.
#WATCH | Alipurduar, West Bengal | PM Narendra Modi says, "Today, when I have come to the land of 'Sindoor Khela', I will naturally discuss India's new resolve against terrorism... The terrorists dared to erase the Sindoor of our sisters. So our Army made them realise the power… pic.twitter.com/1xmjGvYTSa
— ANI (@ANI) May 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இந்தியப் பெண்களின் கண்ணியத்தை அவமதித்த பயங்கரவாதிகளின் துணிச்சலுக்கு நாட்டின் ஆயுதப் படைகள் பழிவாங்கின" என்றார்.




















