ஆபத்தை உணராமல் குளித்ததால் நேர்ந்த சோகம்; நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாணவிகள் உயிரிழப்பு
திண்டிவனம் அருகே கொஞ்சிமங்கலம் கிராமத்தில் ஏரியில் இருந்து வெளியேறும் கலிங்கல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பள்ளி மாணவிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.
விழுப்புரம்: திண்டிவனம் அருகே கொஞ்சிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து வெளியேறும் கலிங்கல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பள்ளி மாணவிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், ஃபெஞ்சல் புயலால் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி கனமழை பெய்து வெள்ளக்காடானது. கனமழை வெள்ள சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், மீண்டும் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் நீர் நிலைகளில் குளிக்கவும் மீன்பிடிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது ஆபத்தை உணராமல் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இளைஞர்கள் மீன்பிடித்தும் ஆற்றில் குளித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த கொஞ்சிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கலிங்கல் பகுதியில் அதே ஊரை சேர்ந்த பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நர்மதா (17). அனுஸ்ரீ (17) ஆகிய இருவரும் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மாணவிகள் இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கிளியனூர் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பொது மக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளை தீவிரமாக தேடினர். இதில் இரண்டு மணி நேர தேடலுக்குப் பிறகு நர்மதா என்ற மாணவி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் நர்மதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில். தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட மாணவி அனுஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டார்.