TN RAIN: புத்தக திருவிழாவில் இப்படியா நடக்கனும்! சோகத்தில் மூழ்கிய விற்பனையாளர்கள் !
விழுப்புரம் : சரியான முறையில் மேற்கூரை அமைக்காததன் காரணமாக விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் மழையில் நனைந்து வீணாகியது.

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்றுவரும் புத்தக திருவிழாவில் மேற்கூறைகள் சரியாக அமைக்கப்படாததால் இன்று பெய்து மிதமான மழையால் புத்தக அரங்குக்குள் மழை நீர் புகுந்ததால் புத்தகங்கள் அனைத்தும் நீரில் நனைந்து வீணாகியது.
புத்தகத் திருவிழா:
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) ஆகியவை இணைந்து நடத்தும், மூன்றாவது புத்தகத்திருவிழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் வருகிற மார்ச் 02-ஆம் தேதி முதல் மார்ச் 12-ஆம் தேதி வரையில் 11 நாட்கள் தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற்று வருகிறது. இதில் 100 புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: வேலையில்லை என்ற கவலைய விடுங்க... இதோ மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம்...500 -க்கும் மேற்பட்ட பணியிடங்கள்...!
மழையில் சேதம்:
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்ட மேற்குறைகள் சரியான முறையில் அமைக்கப்படாததால் மழை நீர் முழுவதுமாக புத்தக அரங்குக்குள் வந்ததால் புத்தகங்கள் நீரில் நனைந்து வீணாகி உள்ளது. இதனால் புத்தக விற்பனையாளர்கள் பெரும் சோகத்தில் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டஙளில் காலை 10 மணிக்கு மேல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
அரங்கில் கலை, இலக்கியம், இலக்கணம், வரலாறு, புதினம். கவிதை. பண்பாடு, அறிவியல், ஆன்மிகம், போட்டி தேர்விற்கான புத்தகங்கள், சரித்திர மற்றும் சமூக நாவல்கள் என அனைத்து விதமான புத்தகங்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெறும் வகையில் அனைவருக்கும் ஏற்ற வகையில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. புத்தக கண்காட்சி நடைபெறும் நாட்களில், தினந்தோறும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு தனித்திறன் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றங்களும், மாலை நேரத்தில் பல்வேறு எழுத்தாளர்கள், சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

