Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Tn weather Forecast : "தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது"

Tamil Nadu Weather Report: " வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது "
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்நாட்டில் வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது. அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதி அடைய தொடங்கியுள்ளனர். குளிர்காலம் முடிந்து முறையாக கோடை காலம் தொடங்காத நிலையில், வெயில் அதிகரித்திருப்பது பொதுமக்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய வானிலை நிலவரம் - Today weather Forecast
இந்தநிலையில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை என்ன?
வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நடைபெற்று வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அநேக இடங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் என்னென்ன ?
ஒரு சில மாவட்டங்களுக்கு இன்று அதிக மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலட் விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலட் விடப்பட்டுள்ளது.
விருதுநகர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை வானிலை நிலவரம் என்ன?
கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நாளையும் கனமழை பெயர் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






















