படப்பிடிப்பு தளத்தில் நடிகை சுட்டுக்கொலையா?.. நடிகரின் மச்சினிச்சி சொன்ன ஷாக்கிங் நியூஸ்
90களில் நடந்த படப்பிடிப்பின் போது பிரபல நடிகை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான ரகசியம் வெளிவந்திருக்கிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தவர் நடிகை ஷில்பா ஷிரோத்கர். இவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மச்சினிச்சியும் ஆவார். தற்போது இவர் சீரியல்களிலும் நடித்து வருகிறார். குடும்பங்கள் கொண்டாடும் நடிகையாகவும் இருக்கும் அவர், சமீபத்தில் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் 90களில் நடித்த படங்களில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
ரகுவீர் படத்தில் வெளியான சுனில் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷில்பா. இப்படம் 1995ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஷில்பா ஷிரோத்கர் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு தளத்திலேயே நடிகை சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியை பார்த்து அவரது பெற்றோர்கள் பதற்றமடைந்துவிட்டனர். ரகுவீர் படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த மக்கள் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இறந்த நடிகை எப்படி உயிருடன் வந்தார் என்ற ஆச்சர்யம் அவர்களுக்கு இருந்திருக்கும். அதே நேரத்தில் எனது அப்பா நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் செய்து என்னை பற்றி விசாரித்திருக்கிறார். நான் அங்கு இல்லை என கூறியுள்ளனர். இப்போது இருப்பது போன்ற போன் வசதி 90களில் இல்லை. ஹோட்டலுக்கு போன் செய்தால் தகவல் தெரிவித்து விடுவார்கள். நான் படப்பிடிப்பில் இருந்ததால் எனது அப்பா ரொம்பவே பயந்து விட்டார். பின்னர் தான் எனக்கு தெரியவந்தது. செய்தித்தாளில் நடிகை ஷில்பா ஷிரோத்கர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தலைப்புச் செய்தியாக வந்திருந்தது. இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் யார் இதை செய்தது என தயாரிப்பாளரிடம் கேட்டேன்.
ரகுவீர் படத்தின் விளம்பரத்திற்காக தயாரிப்பாளர் அப்படி செய்தி கொடுத்தேன் என தெரிவித்ததும் கோபம் வந்தது. ஏன் சார் இப்படி பண்ணீங்க என்று கேட்டேன். ஆனால், இந்த பொய்யான விளம்பரத்தால் ரகுவீர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனால், நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது ரொம்ப ஓவராக இருந்தது தான் ஆனால், படம் ஹிட் ஆனதால் அனைத்தும் மறந்துவிட்டேன் என ஷில்பா ஷிரோத்கர் தெரிவித்தார்.





















