Suzuki Access 125: மைலேஜின் ராஜாவா சுசுகி அக்சஸ் 125! ஒரு லிட்டருக்கு இத்தனை கி.மீ தருமா?
Suzuki Access 125 Mileage: சுசுகி அக்சஸ் 125 தினசரி எவ்வளவு மைலேஜ் தருகிறது என்று வாடிக்கையாளர் ஒருவரை வைத்து சோதித்து பார்த்தோம்

இந்தியாவில் நாளுக்கு நாள் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது, மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகள் கியர் வண்டிகளை விட ஸ்கூட்டர்களை ஓட்டுவதே சுலபமாக கருதுகின்றனர். அந்த வகையில் மக்களால் அதிக விருப்பமுடைய ஸ்கூட்டராக இருக்கும் இதன் மைலேஜ் என்னவென்று இந்த தொகுப்பில் காண்போம்.
சுசுகி அக்சஸ் இன்ஜின்:
சுசுகி அக்சஸ் ஸ்கூட்டரில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் மற்றும் ஏர் கூல்டு இன்ஜினைப் சுசுகி நிறுவனம் பயன்ப்படுத்துகிறது. இந்த இன்ஜினின் திறன் 8.6 ஹார்ஸ் பவரையும் 10.2 என் எம் டார்கை உற்பத்தி செய்கிறது. இதனுடன் cvt வகை ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இந்த் ஸ்கூட்டரில் உள்ளது.
சிறப்பம்சங்கள்
மேலும் இந்த அக்சஸ் ஸ்கூட்டரின் 2025 ஆம் ஆண்டு மாடலில் ஸ்கூட்டரில் 24.5 லி கொண்ட அண்டர் சீட் ஸ்டோரேஜும், வெளிப்புற பெட்ரோல் நிரப்பும் இடம், பாஸ் ஸ்விட்ச் ஹாசார்டு லைட், ரியர் பிரேக் லாக் வசதிக்ளும் உள்ளன.
மொத்தம் எத்தனை வேரியண்ட்ஸ்?
பார்ப்பதற்கே கவர்ச்சிகரமாக இருக்கும் சுசுகி அக்சஸ் 125 மொத்தம் மூன்று வேரியண்ட்களை கொண்டது. ஸ்டாண்டர்டு எடிசன், ஸ்பெஷல் எடிஷன் மற்றும் ரைடு கனெக்ட் எடிஷன் என்று உள்ளது.,
- ஸ்டாண்டர்டு எடிஷனின் விலை 88,036(எக்ஸ் ஷோரூம்) ஆகும், இதில் ஸ்டீல் வீல்கள், டிரம் பிரேக்குகள் மற்று கருப்பு நிற உட்புற பேனல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்,
- ஸ்பெஷல் எடிஷனின் விலை ரூ 94,736 (எக்ஸ் ஷோரூம்) ஆகும், இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் அலாய் வீல்கள், முன்பக்க டிஸ்க் பிரேக்குகள், குரோம் கண்ணாடிகள் மற்றும் பிரெள்ன் மற்றும் பெய்ஜ் நிறத்தில் இண்டீரியர் பேனல்கள் மற்றும் சீட் கவர்கள் இருக்கும்.
- டாப் எண்ட் வெரியண்ட்டில் மட்டும் கூடுதலாக புளூடுத் வசதியுள்ள கனெக்டிவிட்டி வசதி இடம் பெற்று இருக்கும், இதன் மூலம் நெவிகேஷன் மூலம் நீங்கள் செல்லும் இடத்திற்கு செல்லலாம். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ99.336 ஆகும்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் சென்னையில் உள்ள ஷோரூம்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மைலேஜ் எவ்வளவு:
இந்த வகை ஸ்கூட்டரில் மைலேஜ் எவ்வளவு வருகிறது என்று வாடிக்கையாளர் ஒருவரை வைத்து சோதித்து பார்த்தோம். அதில் சென்னையின் நகர சாலைகளில் இந்த ஸ்கூட்டரானது சராசரியாக லிட்டருக்கு 55 கிமீ முதல் 60 கிமீ மைலேஜ் சராசரியாக தருகிறது. மேலும் நெடுஞ்சாலைகளில் ஓட்டும் போது மைலேஜ் இன்னும் சற்று கூடுதலாக தருகிறது.
சமீபத்தில் விலையேற்றம்;
இதற்கிடையில் சமீபத்தில் தான் இந்த ஸ்கூட்டர்களின் விலையை சுசுகி நிறுவனம் உயர்த்தி இருந்தது. ஸ்டாண்டர்ட் எடிஷன் ரூ 900 வரையிலும் ஸ்பெஷல் எடிஷனின் விலை ரூ 1100 வரையிலும், ரைடு கனேட் எடிஷன் ரூ 600 வரையிலும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






















