Jayam Ravi vs Aarti |‘’ஆர்த்தி, ரவி கம்முனு இருங்க’’கறார் காட்டிய நீதிமன்றம் கப்சிப்பான CELEBRITIES
ஆர்த்தி ரவி விவாகரத்து செய்தி வந்த நாள் முதல் மாறி மாறி இருதரப்பினரின் அறிக்கைகளும் இண்டர்நெட்டை ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலையில் இனி நீங்கள் இருவரும் அறிக்கையே விடக்கூடாது என ஆர்த்தி ரவிக்கு குட்டு வைத்துள்ளது நீதிமன்றம்.
கடந்த செப்டம்பரில் ஆர்த்தி ரவி தம்பதியினர் தங்களது பிரிவை அறிவித்தனர். முதலில் இதற்கு பிள்ளையார் சுழி போட்ட ரவி, தனது அறிக்கை மூலம் செய்தியை தெரிவித்தார். ஆனால் சில நாட்களில் தனக்கும் ரவியின் இந்த முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பகீர் கிளப்பினார் ஆர்த்தி..அதன் பின் கெனிஷா என்ற பாடகி இந்த விவகாரத்தில் உள்ளே வர விஷயம் பூதாகரமானது.
இந்த தம்பதியின் விவாகரத்து வழக்கு ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன் ஆர்த்தி கணவர் ரவி தனது குழந்தைகளை கைவிட்டு விட்டதாக அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து அதுவரை வாய்திறக்காத ரவி தன்பக்க நியாயங்களை அடுக்கி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தார் கொடுத்த பண நெருக்கடி மற்றும் மன உளைச்சல்கள் காரணமாகவே இந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறியதாகவும் குழந்தைகளை தான் எப்போதும் கைவிட மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் பாடகி கெனிஷா தான் தனது வாழ்க்கை துனை எனவும் கட் அண்ட் ரைட்டாக தெரிவித்தார்.
இதனையடுத்து ரவியின் மாமியார் சுஜாதா தரப்பில் இருந்தும் பரபர அறிக்கை ஒன்று வெளியானது. தொழில் ரீதியில் ரவிக்கு எந்த பண நெருக்கடிகளையும் தான் கொடுக்கவில்லை என அவர் விளக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து ஆர்த்தி, ரவி வெளியிட்ட அறிக்கையின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஓர் அறிக்கை விட்டார். அதில் கெனிஷாவால் தான் தனது குடும்பம் இந்த நிலைக்கு வந்தது என வெளிப்படையாக பேசியிருந்தார். இப்படி இந்த தம்பதியின் குடும்ப பஞ்சாயத்து வீதிக்கு வர, நீதிமன்ரத்திலும் வ்ழக்கு விசாரனை நடைபெற்றது. அப்போது ரவியிடம் மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு மனு அளித்திருந்தார் ஆர்த்தி. இந்த வழக்கு விசாரணை வரும் ஜூன் 12 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாயாருக்கு தடைவிதிக்க வேண்டுமெனக் ரவிமோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ’இருதரப்பும் இனி அறிக்கைகளை வெளியிட மாட்டோம்’ என உறுதியளித்தனர்.
மேலும் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியிடவும், விவாதிக்கவும் தடைக்கோரினர்.அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரவிமோகன் – ஆர்த்தி இருதரப்பும் தங்களுக்கிடையேயுள்ள பிரச்சனை குறித்து இனி எந்த அறிக்கையும் வெளியிட கூடாது என்றும், இதுவரை சமூகவலைதளங்களில் வெளியிட்ட அறிக்கைகளை நீக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.





















