மேலும் அறிய
Advertisement
முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கு - விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் ஆஜர்
தமிழக அரசையும், தமிழ்நாடு முதலமைச்சரையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் விமர்சித்து பேசியதாக புகார் எழுந்தது.
விழுப்புரம்: தமிழக அரசையும், முதலமைச்சரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியம் விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சி.வி.சண்முகம் இன்று ஆஜராகியதை தொடர்ந்து வழக்கு விசாரனையை 12 ஆம் தேதிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் மே மாதம் 1 ஆம் தேதியும் , ஆரோவில் 10 ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும், தமிழக முதல்வரையும், தரக்குறைவாகவும் அவதூறாகவும் விமர்சித்து பேசியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பரமணியம் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கில் சிவி சண்முகம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டதின் பேரில் ஏற்கனவே 5 முறைக்கு மேல் ஆஜராகி இருந்தார். இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினார். அதனைதொடர்ந்து வழக்கினை விசாரித்த நீதிபதி பூர்ணிமா வழக்கு விசரானை 12.02.2024 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion