மேலும் அறிய

108 Ambulance: விழுப்புரத்தில் ஒரே ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியவர்கள் இத்தனை பேரா?

விழுப்புரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையை கடந்த ஆண்டில் 57 ஆயிரத்து 474 பேர் பயன்படுத்தியுள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் சேவை

தமிழ்நாடு அரசும் EMRI GREEN HEALTH சர்வீஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனமும் இணைந்து கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இலவச 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையை வழங்கி வருகிறது, இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 39 அரசு 108 ஆம்புலன்ஸ்கள் வெவ்வேறு இடங்களில் இயங்கி அதன் சேவையை வழங்கி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் 57 ஆயிரத்து 474 பேருக்கு 108 ஆம்புலன்ஸ்  மூலம் சேவை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரசவ தாய்மார்கள் 12101,  பச்சிளம் குழந்தைகள் 576 பேரும், குழந்தைகள் 550 , சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் சுமார் 11,171 பேரும், காய்ச்சல் காரணமாக 3196 பேரும், இருதய நோய் சம்பந்தப்பட்ட மற்றும் சுவாசப் பிரத்தனை சம்பந்தப்பட்ட சுமார் 5900 பேரும் மற்றும் இதர மருத்துவ சேவைகளுக்காக சுமார் 14,284 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் 2022 ஆம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியவர்கள்  48,316 நபர்கள். இந்த ஆண்டு 57,474 இது கடந்த ஆண்டை காட்டிலும் 9158 நபர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை அதிகமாக பயன்படுத்தி உள்ளனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 32 பேசிக் லைவ் சப்போர்ட் 108 ஆம்புலன்ஸ் , 4 அதிநவீன வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ்களும்,  ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கான அதிநவீன வசதிகளும் கூடிய 108 ஆம்புலன்ஸும் , இரண்டு பைக் ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் பிரசவ தாய்மார்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் 

அவசர பாதிப்பு/ உதவியாளர் 108/102 என்ற எண்ணுக்கு அழைக்கவும். அவசரகால பதிலளிப்பு அதிகாரியின் திரையானது அவசரநிலையை எளிதாக்குவதற்கும் நோக்குவதற்கும் உதவுகிறது, மூலோபாயமாக அமைந்துள்ள ஆம்புலன்ஸை (ஆம்புலன்ஸ்/ போலீஸ்/ தீயணைப்பு) ஒதுக்க உதவுகிறது.

அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (EMT) நோயாளி/பாதிக்கப்பட்டவர்களை நிலைப்படுத்துவதற்காக பொருத்தமான மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, ​​உணர்ச்சிவசப்பட்ட முன்-மருத்துவமனை கவனிப்பை வழங்குவார். அவசரநிலைப் பதில் மைய மருத்துவர் (ERCP) நோயாளியின் பராமரிப்புக்கு ERO, EMT ஆகியவற்றின் ஆதரவுடன், உகந்த முன் மருத்துவமனைப் பராமரிப்பை உறுதி செய்ய அறிவுறுத்துகிறார்.

13 மாநிலங்களுடன் (ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத், கோவா, தமிழ்நாடு, கர்நாடகா, அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம், கேரளா, டெல்லி & யூனியன் பிரதேசம் (டாமன் & டையூ, தாத்ரா & நகர் ஹவேலி) 7937- 108 உடன் இணைந்து செயல்படுகிறது. 54,000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட EMS ஆம்புலன்ஸ்கள். EMRI Green Health Services, GVK EMRI ஆனது, 28 ஜூலை, 2016 அன்று PPP முறையில் இலங்கையில் பயிற்சி, துவக்க மற்றும் செயல்பாட்டில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியது. இந்த திட்டம் GoI ஆல் ஆதரிக்கப்படுகிறது. 15 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 840 மில்லியன் மக்கள் உள்ளனர் (கிராமப்புறம், மலைப்பாங்கான மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்பு அதிகரித்து வருகிறது).

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget