போதை பழக்கத்தில் இளைஞர்கள் அடிமையாவதுதான் திராவிட மாடல் ஆட்சியா..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் மீதான தடை உத்தரவை, தாமதமின்றி நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுதியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று திருவண்ணாமலை அடுத்த வேடியப்பனூர் கிராமத்தில் பாமக நிர்வாகிகளுடன் வாங்க பேசலாம் என்ற நிகழ்ச்சியில் நிர்வாகிகளை சந்தித்து கலந்துறையாடினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நந்தன் கால்வாய் திட்டத்திற்கு பல கட்ட போராட்டங்களை பாமக நடத்தியுள்ளதாகவும், இந்த நந்தன் கால்வாய் சீரமைப்பு திட்டத்தினை உடனடியாக தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்றும், மேலும் நந்தன் கால்வாய்யுடன் தென்பெண்ணையாற்றை இணைக்க வேண்டும் இதனால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள் என்றும், இந்த ஆண்டு மட்டும் தென்பெண்ணையாற்றில் 20 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளதாகவும் ஆகவே நந்தன் கால்வாயை தென்பெண்ணையாற்றுடன் இணைக்கும் திட்டத்தினை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழக வளர்ச்சிக்கு சிப்காட், சிட்கோ போன்ற திட்டங்கள் தேவைதான் என்றும், ஆனால் விவசாயிகளின் விலை நிலங்கள் மற்றும் காடுகளை அழித்து விட்டு அந்த பகுதிகளில் சிப்காட் மற்றும் சிட்கோ திட்டங்களை கொண்டு வருவதும், 8 வழிச்சாலை திட்டங்களை கொண்டு வருவதும், ஒன்றை அழித்துவிட்டு மற்றொன்றை கொண்டுவருவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் ஆம்னிபேருந்தின் கட்டணம் விமான கட்டணத்தினை விட அதிகமாக உள்ளதாகவும்,மேலும் மின்கட்டன உயர்வை இந்த அரசு கைவிட வேண்டும் என்றும், மாதம் மாதம் மின்கட்டண கணக்கெடுப்பினை தமிழக அரசு நடைமுறை படுத்த வேண்டும் என்றும், இது தேர்தல் அறிக்கையில் தமிழக அரசு வாக்குறுதியாக அளித்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த இரண்டு சமுதாயமும் முன்னேறினால், தமிழகம் முன்னேற்றம் அடையும். தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை, தாமதமின்றி நிறைவேற்றி ஆளுநர் சட்டமாக்க வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 6 ஆண்டுகளில் 80 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் என்றார். நிலப் பரப்பளவில் மிகப்பெரியதாக உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்பை வரும் கூட்ட தொடரில் அறிவிக்க வேண்டும்.10.5 சதவிகிதம், சீர்மரபினருக்கான 7.7, பிற்படுத்தப்பட்டோருக்கான 2.5 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி சமூக நீதியை காக்க வேண்டும் என்றும், மதுபான கடைகளை குறைக்காமல் தமிழக அரசு மதுபான பார்களை திறப்பதை குற்றம் சாட்டிய அன்புமணி ராமதாஸ் அவர்கள், கஞ்சா,அபின் ஆகிய போதை பொருட்கள் பல்வேறு வடிவங்களில் தமிழகத்தில் இருப்பதாகவும், இதற்காக போதை ஒழிப்பு துறையில் போதுமான காவல்துறையினரை நியமிக்க வேண்டும் என்றும், தமிழக இளைஞர்கள் மதுவிற்க்கும், போதைக்கு அடிமையாவது தான் கடந்த இரண்டு கட்சிகளின் திரவிட மாடல் அரசாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினர்.
சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்காக ஆர்எஸ்எஸ் மற்றும் விசிக கட்சியின் பேரணிகளுக்கு தடைவிதித்துள்ளதாகவும் காவல்துறை தனது கடமையை செய்துள்ளதாகவும், தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் பருவ நிலை மாற்றத்தால் சென்னை ஆகிய பகுதிகளில் ஏற்ப்படும் வெள்ள பெருக்குகளை தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார். குறிப்பாக நீர் மேலாண்மை திட்டத்திற்கு ஒரு லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்க்கொள்ள வேண்டும் என்றும்,பருவ நிலை மாற்றும் குறித்து எந்த வித அரசு பேசுவதில்லை என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டடினார்.