Ayudha Pooja 2023 : வந்துவிட்டது ஆயுத பூஜை.. திருச்சி காந்தி மார்கெட்டில் பூக்களின் விலை நிலவரம் இதோ!
ஆயுத பூஜை ,சரஸ்வதி பூஜை பண்டிகையை முன்னிட்டு திருச்சி காந்தி மார்கெட்டில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர்.

நவராத்திரி பண்டிக்கையின் முக்கிய நாளாக கொண்டாடப்படுவது ஆயுத பூஜை. நவராத்திரியின் 9 நாட்கள் கொண்டாட்டத்தின் இறுதி நாளான 9வது நாள் வழிபடுவது தான் ஆயுத பூஜை ஆகும். துர்கை அம்மனுக்கும் மஹிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது. 8 நாட்கள் கழித்து 9வது நாள் மஹிஷாசுரனை வதம் செய்கிறாள் துர்கை. இந்த நாளையே துர்கா பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் அழைக்கின்றனர். 9 நாட்கள் சண்டை, மஹிஷாசுரன் வதத்துடன் வெற்றிப்பெறுவதால் 10வது நாளை விஜயதசமி என்றும் கொண்டாடுகின்றோம். மேலும், இந்த 9 நாட்களும் பலரும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து, பலகாரங்கள் சமைத்து, அக்கம் பக்கத்தினருக்கு அதனை பிரசாதமாக அளித்து கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தை குறிக்கும் வகையில் வழிபாடு செய்யப்படுவது வழக்கம். அதன் படி, 9வது நாளில் தேவி சரஸ்வதியை வழிப்படும் காரணத்தால், அன்று சரஸ்வதி பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.
ஆயுத பூஜையின் கொண்டாட்டத்தின் காரணம்:
கொடியன் மஹிஷாசுரன் தனது படையுடன் இணைந்து தேவி சாமுண்டேஸ்வரியை அழிக்கும் நோக்கத்துடன் சண்டையிட்டு வந்தான். இறுதியாக மஹிஷாசுரன் செய்யும் அக்கிரமங்களை பார்த்து, ஆக்ரோஷமாக அவதாரம் எடுத்தாள். அந்த அவதாரமே துர்கை அவதாரம். தனது கூர்வாள் போன்ற ஆயுதங்களை கொண்டு மஹிஷாசுரனை வதம் செய்தாள். இதன் காரணமாக ஆயுதபூஜை வழிப்பாடு காலம் காலமாக நடத்தப்படுகிறது என்று புராண கதைகள் சில கூறுகிறது. மேலும் பிற புராண கதைகளில், குருக்ஷேத்திரா போருக்கு புறப்பட்ட அர்ஜுனன், தனது ஆயுதங்களை பிரயோகித்து போர் புரிந்தார். அந்த போரில் அவர் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது
இதனை தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் சந்தையை பொறுத்தவரை திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை போன்ற சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள், பூக்கள், வாழை கன்று, பழங்கள் போன்ற பொருட்களை வாங்குவதற்காக மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள். அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. ஆயுத பூஜை சரஸ்வதி, பூஜை நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மொத்த வியாபாரிகளும் பொதுமக்களும் காந்தி மார்க்கெட்டில் கூடியதால் காந்தி மார்கெட் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
திருச்சி காந்தி மார்கெட்டில் பூக்களின் விலை நிலவரம் (கிலோ ஒன்றுக்கு)
மல்லிகைப்பூ கிலோ - 600 முதல் 800 வரை
முல்லைப் பூ கிலோ - 600 முதல் 800 வரை
கனகாம்பரம் - கிலோ 800
செவ்வந்தி கிலோ -300
ரோஸ் கிலோ - 400
சம்பங்கி கிலோ - 300
விச்சிப்பூ கிலோ - 250
இதே போல் பூஜை பொருட்கள் விலை :
பொரி ஒரு படி - 10 ரூபாய்
வாழை கன்று ஜோடி - 25
பூசணி ஒன்று - 80
வாழை பழம் சீப்பு - 50 ரூபாய்
தேங்காய் ஒன்று - 15 முதல் 25 ரூபாய், விற்பனை செய்யபட்டு வருகிறது.
இதனால் காந்தி மார்க்கெட் பகுதி முழுவது போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

