Crime : பதைபதைக்க வைக்கும் சம்பவங்கள்.. இரக்கம் வரவைக்க ட்ராமா.. 50 பெண்களுக்கு ஆபாச வீடியோ.. இளைஞர் கைது..
50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய தென்காசி பகுதியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய தென்காசி பகுதியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மதுரை சிறுமி தரப்பில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ஆபாச வீடியோக்கள் :
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு செல்போன் எண்ணில் இருந்து ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வந்துள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் அருகிலிருந்த சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் உடனடியாக உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, தொடர்ந்து தேடுதல் பணியில் காவல்துரையினர் ஈடுப்பட்டனர். அப்போது, அந்த செல்போன் தென்காசி மாவட்டம் தீர்த்தாரப்பபுரம் பகுதியை சேர்ந்த 32 வயதான கோபி என்பவருடையது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துரையினர் அங்கு சென்று கோபியை கைது செய்தனர். பின்னர் மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
இது குறித்து காவல்துறையினர் வெளியிட்ட தகவலின்படி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கோபி வேலை பார்த்து வந்தார். இவர், வாட்ஸ்அப்பில் பலருக்கு குறுந்தகவல்கள் அனுப்பி வந்துள்ளார். எதிர்முனையில் பதில் அளிப்பவர், பெண்ணாக இருந்தால், தனக்கு பெற்றோர் இல்லை என கூறி அவர்களுடன் பழகி நட்பு கொண்டுள்ளார். பின்னர் அவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
தொடர்ந்து இவர், மதுரை, நெல்லை, தென்காசி, திண்டுக்கல் என பல மாவட்டங்களில் உள்ள 50-க்கும்மேற்பட்ட பெண்களுக்கு இதுபோல் ஆபாச வீடியோக்கள் அனுப்பி உள்ளார். இது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்