Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னையில் நாளை 19-06-2025 பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது"

Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
சென்னையில் நாளை மின்தடை: 19.06.2025
இந்நிலையில், நாளை(19.06.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக புதன்கிழமை (19.06.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
கிஷ்கிந்தா:
கிஷ்கிந்தா மெயின் ரோடு, கன்னட பாளையம், சர்வீஸ் ரோடு (சாய் நகர்), வசந்தம் நகர், சமத்துவ பெரியார் நகர், ஆர்.கே.நகர் மற்றும் அன்னை இந்திரா நகர்.
சிட்லபாக்கம் மகாலட்சுமி நகர்:
மகாலட்சுமி நகர், சுந்தரம் காலனி, ராஜேஸ்வரி நகர், தனலட்சுமி நகர், வேளச்சேரி பிரதான சாலை, பதிவு அலுவலகம், சபாய் சாலை, மாருதி நகர் 2வது பிரதான சாலை, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் சாலை.
சேலையூர்
பதுவஞ்சேரியின் ஒரு பகுதி, சதாசிவம் நகர், பெரியார் நகர், முல்லை நகர், மாடம்பாக்கம் பகுதி ராதா நகர், பரசுவநாத் அவென்யூ, ஏஎஸ்கே நகர், அம்பாள் நகர், காந்தி நகர், யஷ்வந்த் நகர், பெரிய கைலேஷ் நகர்,
முடிச்சூர்:
திருநீர் மலை சாலை, சுந்தரம் காலனி, ரமேஷ் நகர், பிள்ளையார் கோயில் தெரு, அமர் நகர், ரயில் நகர் மற்றும் சிங்காரவேலன் தெரு
காந்தி நகர்-1வது பிரதான சாலை
காந்தி நகர் அடையாறு 1வது பிரதான சாலையின் ஒரு பகுதி, கிருஷ்ணமாச்சாரி சாலை, கோகுல் ஹேர் கட், சர்தார் படேல் சாலை.
பள்ளிக்கரணை:
பள்ளிக்கரணை- வேளச்சேரி மாகர் சாலை, காந்தி தெரு, நேரு தெரு, பவானி அம்மன் கோயில் தெரு, பாரதிதாசன் தெரு, புறவங்கரை இ.டபிள்யூ.எஸ்.பள்ளிக்கரணை- காமகோடி நகர், லேபர் காலனி, சாய் பாலாஜி நகர், சிண்டிகேட் காலனி
வடக்குப்பட்டு:வடக்குப்பட்டு, தர்மபூபதி நகர், நவின், சத்யா நகர், சுபிக்ஷா அவென்யூ
கௌரிவாக்கம்
வெங்கைவாசல் மெயின் ரோடு, சந்தோஷபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, ரூபி புல்டிங், அனந்த நகர், இந்திரா நகர், பாலாஜி நகர், ரங்கராஜபுரம், ஜெயலட்சுமி நகர், மகாராஜபுரம், விஜயா நகர்
மேடவாக்கம்
பெரும்பாக்கம் மெயின் ரோடு, பல்லவன் நகர், பாண்டியன் நகர், திருவள்ளுவர் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, ஜெயச்சந்திரன் நகர் (ஒரு பகுதி) எல்ஆர் அவென்யூ, பொன்னியம்மன் நகர், அத்தித்தாங்கல்
பல்லாவரம் மேற்கு:
பம்மல் மெயின் ரோடு, அட்டுத்தொட்டி, கிருஷ்ணா நகர் 1ST முதல் 4வது தெரு, முத்தமிழ் நகர், NSK தெரு, நடராஜன் தெரு, பிருந்தாவன் காலனி, கென்னடி தெரு, மூங்கிலேரி பகுதி.
இரும்பூலியூர்:
இரும்பூலியூர் சுந்தரம் காலனிபாரத மாதா தெரு, வால்மீகி தெரு, ஏரிக்கரை தெரு, திருவள்ளுவர் தெரு, கந்தசாமி காலனி, எல்ஐசி காலனி, குல சேகரன் தெரு, காசியப்பர் தெரு, சுந்தரம் காலனி பகுதிகள்.
கடப்பேரி லட்சுமிபுரம்:
புதிய தெரு, அம்பேத்கர் நகர், மந்திரி குடியிருப்புகள், சோழவரம் நகர்
பல்லாவரம் கிழக்கு:
பாரதி நகர் மெயின் ரோடு, பாரதி நகர் 1 முதல் 5 குறுக்குத் தெரு, துலுக்கநாதம்மன் கோயில் தெரு, பச்சையம்மன் நகர், குவாரி மெட்டு தெரு, கபிலர் தெரு, வைத்தியர் தெரு
அனகாபுத்தூர்:
ஆதம் நகர், சங்கர் நகர் 38வது தெரு, 39வது தெரு, 40வது தெரு மற்றும் 41வது தெரு, அப்பாசாமி & சங்கர் நகர் பிரதான சாலை.






















