Parotta Festival | இந்த கடைக்குப்போய் இத்தனை பரோட்டா சாப்பிட்டா, தங்க நாணயம் உட்பட இதெல்லாம் பரிசு..!
உணவகம் ஒன்றில் நடந்த பரோட்டா, திருவிழா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டு உணவு பிரியர்களில் அதிக பெருக்கு பிரியாணி மிகவும் பிடித்த உணவாக அமைந்துள்ளது. அதற்கு சமமாக அல்லது அடுத்தப்படியாக அனைவருக்கும் பிடித்த உணவாக அமைந்துள்ளது பரோட்டா தான். பரோட்டா சால்னா என்றவுடன் மதுரை கடைகள் எப்போதும் அசத்தும். அதிலும் தென் மாவட்டங்களில் இருக்கும் பரோட்டா சால்னா காம்பினேஷன் சும்மா நம்மை கட்டி இழுக்கும் வகையில் அமைந்திருக்கும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் சும்மாவே பரோட்டா என்றால் நம்முடைய இளைஞர்கள் ஓடி சென்று சாப்பிடுவார்கள். அந்த வகையில் தற்போது ஒரு கடையில் பரோட்டா திருவிழாவே நடந்துள்ளது. அதற்கு நம்முடைய இளைஞர்கள் செல்லாமலா இருந்திருப்பார்கள். மேலும் அந்த திருவிழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க நாணயம் என்ற சொன்னால் அதற்கு வராத கூட்டமா. அப்படி அந்த திருவிழாவில் நடந்த போட்டி என்ன? எங்கே நடந்தது அந்த பரோட்டா திருவிழா?
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விஐபி என்ற அசைவ உணவக கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையில் பிரியாணிதான் முக்கியமான உணவாக பரிமாறப்பட்டது. இந்தக் கடை திறந்து உடன் மக்களிடையே சென்று சேர பல சலுகைகளை அறிவித்து வந்தது. அந்தவகையில் தற்போது ஒரு புதிய சலுகையை அறிவித்திருந்தது. அதாவது ஒரு நபர் 27 பரோட்டா, ஒரு சிக்கன் ஃபிரைட் ரைஸ்,ஃபலூடா ஆகியவற்றை சாப்பிட வேண்டும். அப்படி அனைத்தையும் சாப்பிட்டால் அவருக்கு பரிசாக தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டிக்கு பரோட்டா திருவிழா என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்தச் செய்தியை அறிந்த பலரும் அந்த கடைக்கு முந்தி அடித்து கொண்டு பெரியளவில் வந்துள்ளனர். கண் இமைக்கும் நொடியில் அவ்வளவு கூட்டம் அந்த கடை முன்பாக குவிந்தது. இறுதியில் அருண் பிரகாஷ் என்பவர் 27 பரோட்டா, ஒரு சிக்கன் ஃபிரைட் ரைஸ் மற்றும் ஃபலூடா ஆகியவற்றை வெற்றிகரமாக சாப்பிட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு கடையின் உரிமையாளர்கள் ஒரு தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளனர்.
இந்தப் போட்டி தொடர்பாக கடையின் உரிமையாளர், “எங்களுடைய புதிய கடையை மக்களிடம் பிரபல படுத்த புதிதாக பல ஆஃபர்களை அறிவித்து வருகிறோம். அந்த நோக்கத்தில் தான் இந்த பரோட்டா திருவிழாவை நடத்தினோம். இதற்கு மக்களிடையே இவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருக்கும் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. எங்களுடைய கடை மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தால் அதுவே எங்களுக்கு பெரிய வெற்றி” எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: வீட்டை எழுதி தராத கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி கைது: கண்ணில் மிளகாய் பொடி தூவி ‛டார்ச்சர்’ செய்தது அம்பலம்!
Rajinikanth Admitted In Kauvery Hospital | "அவருடன் நானும் இருக்கிறேன் ; வழக்கமான CheckUpதான்" - ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு லதா ரஜினிகாந்த் தகவல் #Rajinikanth #KauveryHospitalhttps://t.co/zv2qEb1Xys
— ABP Nadu (@abpnadu) October 28, 2021
Rajinikanth Admitted In Kaveri Hospital | நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதி..#KaveriHospital #Rajinikanthhttps://t.co/qA7DKDx5Aj
— ABP Nadu (@abpnadu) October 28, 2021