மேலும் அறிய
Advertisement
Thiruvarur: பயனாளி இறந்த பிறகு காப்பீடு தொகை; யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்க்கு ரூ.67 ஆயிரம் அபராதம்
மருத்துவ காப்பீடு தொகையை பயனாளி இறந்த பிறகு கொடுத்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம். இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 67 ஆயிரத்து 310 ரூபாய் அபராதம் விதித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அகம்படியார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்து அதற்கான பணத்தை மாதந்தோறும் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த 04.05.2020 முதல் 10.05.2020 வரை திருச்சி உறையூர் பகுதியில் உள்ள சாய் கேர் மருத்துவமனையில் எலும்பு முறிவு தொடர்பாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும், அவரது சிகிச்சைக்காக ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு தொகை உள்ளது என தெரிவிக்கப்பபடிருந்தது. இந்த நிலையில் கடந்த 17.05.2021 அன்று சந்திரசேகரன் உயிரிழந்துள்ளார்இந்த நிலையில் சந்திரசேகனுக்கு வர வேண்டிய மருத்துவ காப்பீடு தொகை அவர் இறந்த பிறகு பாதி தொகை மட்டுமே அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சந்திரசேகரனின் மகன் சத்தியமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நூகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலெட்சுமி அடங்கிய அமர்வு மருத்துவமனை கடந்த 11.05.2020 ல் சந்திரசேகரன் பேரில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 810 ரூபாய்க்கு ரசீது வழங்கி உள்ளது. 17.05.2021 அன்று அவர் உயிரிழந்துள்ளார்.அவர் இறந்த பிறகு கடந்த 22.06.2022 அன்று அவரது வங்கி கணக்கில் மருத்துவ காப்பீடு தொகையாக 70 ஆயிரத்து 500 ரூபாயை இன்சூரன்ஸ் நிறுவனம் வரவு வைத்துள்ளது.
மேலும், சந்திரசேகரன் உயிருடன் இருக்கும் காலத்தில் அவரது மருத்துவ காப்பீடு தொகையை பலமுறை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கேட்டும் கொடுக்காமல் அவர் இறந்த பிறகு அவரது கணக்கில் வரவு வைத்துள்ளது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. அவர் உயிரோடு இருக்கும் காலத்தில் இந்த மருத்துவ காப்பீடு தொகையை அவர் அனுபவிக்காமல் இறந்து விட்டார் என இந்த ஆணையம் கருதுகிறது.
சந்திரசேகரனின் வாரிசுகள் பலமுறை மருத்துவ காப்பீடு தொகை கேட்டு மனு கொடுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனம் உரிய பதில் அளிக்காமல் இருந்துள்ளது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதி புகார்தாரரின் தந்தை சந்திரசேகருக்கு கொடுக்க வேண்டிய பாக்கி மருத்துவ காப்பீடு தொகையான 52 ஆயிரத்து 310 ரூபாயை புகார்தாரருக்கு சென்னை அண்ணா சாலையைச் சேர்ந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்தரப்பினரால் புகார்தாரர் மற்றும் அவரது உடன் பிறந்தவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக பத்தாயிரம் ரூபாயும் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாயும் வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion