மேலும் அறிய
Advertisement
இறந்தவரின் சேமிப்பு கணக்கு விபரங்களை தர மறுத்த சிட்டி யூனியன் வங்கிக்கு அபராதம் விதிப்பு
இரண்டு மாத காலத்திற்குள் வங்கி கணக்கு விவரங்களை தருவதுடன் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக 15 ஆயிரம் ரூபாயும் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாயும் வழங்க வேண்டும்.
இறந்த கணவரின் சேமிப்பு கணக்கு விபரங்களை மனைவிக்கு தர மறுத்த சிட்டி யூனியன் வங்கிக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்திற்குட்பட்ட பாலகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் டாக்டர் மோகன் இவர் மன்னார்குடி காந்தி ரோடு பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்கிற மனைவியும் மைனர்களான ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர் அந்த வங்கியில் வாங்கிய கடனுக்கான சட்ட நடவடிக்கைகளை வங்கி எடுத்து வந்துள்ளது. டாக்டர் மோகன் வாங்கிய கடன் பற்றிய விவரங்கள் ஏதும் சரஸ்வதிக்கு தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக சரஸ்வதி மற்றும் அவரது மகன் மகள் ஆகியோர் வாரிசு சான்றிதழ் மற்றும் டாக்டர் மோகனின் இறப்புச் சான்றிதழ் உடன் மன்னார்குடி சிட்டி யூனியன் வங்கியில் கடந்த 2013 ஆம் வருடம் முதல் 31.08.2018ம் தேதி வரை உள்ள கணக்கு வரவு செலவு மற்றும் பெற்ற கடனில் வரவு வைக்கப்பட்டுள்ள தொகை குறித்த முழு விவரங்களையும் தனக்கு வழங்கும் படி விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு மன்னார்குடி காந்தி நகர் சிட்டி யூனியன் வங்கி கிளை தரப்பில் சரஸ்வதி முறையாக விண்ணப்பிக்கவில்லை அவரது வங்கிக் கணக்கில் நாமினி ஏதும் குறிப்பிடப்படவில்லை என்று பல காரணங்களை கூறி கணக்கு விவரங்களை தராமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சரஸ்வதி மற்றும் மைனர் குழந்தைகள் கடந்த மார்ச் மாதம் 2021 இல் இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு, இறப்புச் சான்றிதழ் வாரிசு சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்தும் வங்கி கணக்கு விவரங்களை தராமல் இழுத்தடிப்பு செய்தது சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் கருதுகிறது. எனவே இரண்டு மாத காலத்திற்குள் வங்கி கணக்கு விவரங்களை தருவதுடன் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக 15 ஆயிரம் ரூபாயும் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாயும் வழங்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த தொகையினை மன்னார்குடி காந்தி நகர் சிட்டி யூனியன் வங்கி கிளை மற்றும் நிர்வாக இயக்குனர் சிட்டி யூனியன் வங்கி கும்பகோணம் ஆகிய இருவரும் இணைந்தோ அல்லது தனித்தோ வழங்க வேண்டும் என்றும் இரண்டு மாத காலத்திற்குள் தொகையினை வழங்காத பட்சத்தில் ஒன்பது சதவீத வருட வட்டியுடன் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion