Mayiladuthurai: மதுக்கடைக்கு எதிராக திரண்ட கிராம மக்கள் - சீர்காழி அருகே பரபரப்பு
சீர்காழி அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மதுபான கடை அமைய உள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆண்டுக்கு 500 மதுக்கடைகளை மூடி படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் புதிய மதுக்கடைகள் மற்றும் மதுபான பார்கள் என புது புது தகவல்களும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தாண்டவன்குளத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அப்பகுதியில் விளை நிலங்களுக்குகிடையே உள்ள கட்டிடத்தை கடந்த சில நாட்களாக சீரமைத்து வந்துள்ளனர். இதனை அறிந்த தாண்டவன்குளம் கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் அரசு மதுபானக் கடை அமையவுள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டு மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுபான கடை அமைந்தால் சுற்றியுள்ள விளை நிலங்கள் பாதிக்கபடும் எனவும், காலி மதுபாட்டில்கள் நிலத்தில் வீசி உடைவதால் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பழையபாளையம், கொடக்காரமூலை, தாண்டவன்குளம் கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று வரும் பிரதான இணைப்பு சாலையில் டாஸ்மாக் கடை அமைவதால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
K.V.Anand: பத்திரிக்கையாளர் டூ இயக்குநர்.. 18 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நடந்த நடந்த சம்பவம்..!
சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் சென்று வரும் சாலையில் மதுபான கடை அமைந்தால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாம் எனவும் அச்சம் தெரிவித்தனர். எனவே மூன்று கிராமமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி தாண்டவன்குளத்தில் அரசு மதுபான கடை அமைக்க கூடாது என கையில் பதாகைகள் ஏந்தி அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழப்பினர்.
Computerized Driving Test: தமிழகத்திலேயே முதல் முறையாக கரூரில் தானியங்கி கணினி ஓட்டுனர் தேர்வு தளம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்