சாமுண்டீஸ்வரி போடும் திட்டம்! மாப்பிள்ளை தோழனான கார்த்தி! மணமேடையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
karthigai deepam serial: மல்லிகா மகேஷ் பற்றிய உண்மைகளை சொன்ன பிறகும் சாமுண்டீஸ்வரி கல்யாண ஏற்பாடுகளைச் செய்வதால் கார்த்திகை தீபம் சீரியல் விறுவிறுப்பாகியுள்ளது.

Karthigai Deepam Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் டாக்டர் மல்லிகா சாமுண்டீஸ்வரியை கோவிலில் சந்தித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமுண்டீஸ்வரியின் திட்டம்:
டாக்டர் மல்லிகா "மகேஷ் கெட்டவனு சொல்லியும் அவனுக்காக உன் பொண்ணை கட்டி வைக்க போற" என்று கேட்க, சாமுண்டீஸ்வரி "நீ கவலையே படாதே, கண்டிப்பா மகேஷ் என் பொண்ணு கழுத்தில் தாலி கட்ட மாட்டான்" என்று சொல்கிறாள்.
மல்லிகா வேற யாரையாவது யோசித்து வச்சிருக்கியா என்று கேட்க, இவளும் ஆமாம் என்று சொல்ல இவர்கள் பேசுவதை சந்திரகலா ஒட்டு கேட்கிறாள், உடனே சிவனாண்டியை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லி ஒரு வேலை அக்கா சொல்ற மாப்பிள்ளை அந்த டிரைவராக இருக்குமோ என்று சந்தேகத்தை சொல்கிறாள்.
சிவனாண்டி விடு நாம பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறான். மறுபக்கம் பரமேஸ்வரி பாட்டி கோவிலில் உட்கார்ந்து, "என்ன முருகா! கல்யாண தேதியே நெருங்கிடுச்சி. என்ன நடக்க போகுதோ என வருந்துகிறாள். கண் முன் தோன்றிய முருகன் பரமேஸ்வரி நான் சொன்ன மாதிரியே இந்த கல்யாணம் நடக்கும். சாமுண்டேஸ்வரியே உன் பேரன் கையால் தாலி கட்ட சொல்லுவா" என்று சொல்கிறார்.
அடுத்து மண்டபத்தில் மணமக்கள் அழைப்பிற்கான ஏற்பாடுகள் நடக்க மகேஷ் லேட்டாக வருகிறான். அவன் வந்ததும் மயில் வாகனம் மாலையை போட்டு விடுகிறான்.
மாப்பிள்ளை தோழன்:
ரேவதியை சாமுண்டீஸ்வரி ஊர்வலத்திற்காக காரில் உட்கார சொல்ல, மாயா மகேஷையும் உட்கார சொல்ல சாமுண்டேஸ்வரி இது பெண் அழைப்பு ெபண்ணைதான் ஊர்வலமாக அழைத்து செல்வோம். அது தான் எங்க வழக்கம் என தடுத்து நிறுத்தி மண்டபத்திற்கு வந்து விட சொல்கிறாள். மேலும் இனிமே கார்த்திக் தான் மாப்பிள்ளை தோழன் என்று சொல்ல எல்லாரும் ஷாக் ஆகின்றனர்.
சந்திரகலா அவன் ட்ரைவர் என்று சொல் சாமுண்டீஸ்வரி கார்த்தியை தம்பி போல் நினைப்பதாக பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்





















