அப்பாவை அதை செய்ய வைப்பேன்...ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளானை சொன்ன எஸ்.ஏ.சி
பிளாக்பஸ் படம் ஒன்றை கொடுத்து தனது தந்தை விஜயை தன் கால்ஷீட் கேட்கவைக்க வேண்டும் என்பதே ஜேசன் சஞ்சயின் ஆசை என எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

ஜேசன் சஞ்சய்
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் இன்னும் ஒரு படத்திற்கு பின் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். விஜயைத் தொடர்ந்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் திரைத்துறைக்கு வர இருக்கிறார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் விஜயின் மகனும் நடிகராகவே திரைக்கு அறிமுகமாவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இயக்கம் பக்கம் சஞ்சய் சென்றுள்ளது ஆச்சரியம் தான். சிறிய வயதில் இருந்தே படம் இயக்குவதில் ஜேசன் சஞ்சய் ஆர்வம் கொண்டவராக இருந்ததோடு அமெரிக்கா சென்று திரைப்பட இயக்கத்திற்கு என பயிற்சியும் பெற்று வந்துள்ளார். ஜேசன் சஞ்சய் குறித்து சமீபத்தில் அவரது தாத்தா எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்
"அடுத்து நீ என்ன பண்ண போற என்று நான் சஞ்சயிடம் கேட்டேன். அவர் ஹீரோவாவார் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் என்னைப் போல் இயக்குநராக வேண்டும் என்றார். 'நான் என்னுடைய முதல் படத்தை அப்பாவை வைத்து எடுக்க மாட்டேன். என்னுடைய முதல் படத்தை விஜய் சேதுபதியுடன் தான் எடுப்பேன். ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்தபின் என் கால் ஷீட் கேட்டு அப்பா என்னிடம் வருவார்' என சஞ்சய் என்னிடம் சொன்னார்" என எஸ்.ஏ.சி தெரிவித்துள்ளார்
#SAC about #JasonSanjay
— Movie Tamil (@MovieTamil4) February 25, 2025
- I asked him what are you going to do Next.
- I thought he become a hero, but he wants to become a director like me.
- I'am not going to do my first film with appa, I'am going to do my first film with #vijaysethupathi.pic.twitter.com/gHGnDN3XoB
ஜேசன் சஞ்சய் தற்போது இயக்கி வரும் படத்திந் 25 கோடியாகும். இப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

