மேலும் அறிய
Jacto Geo: தலை அசைக்காத அரசு; தமிழகம் முழுவதும் ஆசிரியர், அரசு ஊழியர்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்- ஏன்?
மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக, ஜாக்டோ - ஜியோ மாநில அமைப்பு அறிவிப்பு தெரிவித்தது.

ஜாக்டோ ஜியோ போராட்டம்
Source : சிறப்பு ஏற்பாடு
பழைய ஓய்வூதியக் கோரிக்கை, சரண் விடுப்பு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றுகூறி, ஆசிரியர், அரசு ஊழியர்கள் அடங்கிய ஜாக்டோ – ஜியோ அமைப்பு, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது.
மதுரை உயர் நீதிமன்றம் போராட்டத்தை நடத்த வேண்டாம் என்று நேற்று உத்தரவிட்டுள்ளதால், மறியல் போராட்டத்துக்கு பதிலாக, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக, ஜாக்டோ - ஜியோ மாநில அமைப்பு அறிவிப்பு தெரிவித்தது.
என்னென்ன கோரிக்கைகள்?
- இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
- தொடக்க கல்வித்துறையில் பணியுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.
- முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழிற்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள ஊதிய முரணிபாட்டினைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்ந்த வேண்டும்.
- சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய்கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப்பணியாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பணியாற்றும் COE & Ppp பயிற்றுனர்கள் மற்றும் அலுவலர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
- மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் பற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
- அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
- 21 மாத ஊதியமாற்று நிலுவைத் தொகை அரசு ஊழியர் ஆசிரியர்கள் அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுவருவதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- 2002 முதல் 2005 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
- சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்திட வேண்டும்.
இவ்வாறு ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு






















