DK Shivakumar vs Siddaramaiah: ஆட்டம் முடிந்தது..! ஆட்டநாயகன்(CM) சித்தராமையாதான்... யார் இவர்? கடந்து வந்த பாதை!
சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வந்தநிலையில், சித்தராமையாதான் முதலமைச்சர் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று செய்திகளை சந்தித்து தெரிவித்தார்.
கர்நாடக தேர்தல் முடிவுகளில் (Karnataka Election Results 2023) காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் பதவிக்கு (Karnataka's New CM) சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வந்தநிலையில், சித்தராமையாதான் முதலமைச்சர் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று செய்திகளை சந்தித்து தெரிவித்தார்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள்:
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக 43 சதவிகித வாக்குகள் பெற்று காங்கிரஸ் சுமார் 130 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தில் நேரடியாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வரும் சூழலில், காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பது யார் என்பது தொடர்பான கேள்வியும் எழுந்துள்ளது.
சித்தராமையா Vs சிவக்குமார்:
கடுமையான களப்பணி மூலம் பாஜகவை வீழ்த்தி, தென்னிந்தியாவில் பாஜகவின் ஆட்சியே இல்லை என்ற சூழலை காங்கிரஸ் உருவாக்கியுள்ந்ந்த்ளது. எதிர்க்கட்சிகள் உடனான மோதல் முடிவுற்ற நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவகாரத்தில் உட்கட்சியிலே கடுமையான மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக தேர்தலில் வெற்றிபெற அரும்பாடுபட்ட காங்கிரஸ் மாநில தலைவர் டி. கே. சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவி வந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக சித்தராமையாதான் முதலமைச்சர் என்றும், டி.கே சிவக்குமார் துணை முதலமைச்சர் என்றும் காங்கிரஸ் மேலிடம் இன்று தெரிவித்தது. இந்தநிலையில் யார் இவர்கள் என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்....
சித்தராமையா:
சித்தராமையா கடந்த 2013 முதல் 2018 வரை ஐந்து ஆண்டுகள் கர்நாடக முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். கட்சியை கடந்த பலரும் சித்தராமையா முதலமைச்சராக வரவேண்டும் என்பதையே விரும்புகின்றனர். பெரும்பாலானவர்களுக்கு சித்தராமையா மிகத் தெளிவான தேர்வாக இருக்கலாம், ஆனால் காந்தி குடும்பம், குறிப்பாக ராகுல் காந்தி 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பதற்கான சரியான தேர்வாக சித்தராமையாவை கருதுகிறார். இதுவே தனது கடைசி சட்டப்பேரவை தேர்தல் என்று ஏற்கனவே சித்தராமையா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் சித்தராமையா மீது பல்வேறு விமர்சனங்களும் உள்ளன. 76 வயதான அவர் தனது குருபா சமூகத்தின் அதிகாரிகளுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் அளித்தது, லிங்காயத் மற்றும் வொக்கலிகாக்கள் போன்ற மற்ற சமூகத்தினரிடையே எதிர்ப்பை பெற்றுள்ளது. திப்பு சுல்தானை அவர் புகழ்ந்து பேசும் வார்த்தைகள் காங்கிரஸ் கட்சியினர் பெரிதாக விரும்பவில்லை. கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்த பல PFI மற்றும் SDPI செயல்பாட்டாளர்களை விடுவிக்கும் அவரது முடிவுக்கும் கடும் எதிர்ப்புகள் உள்ளன.
டி. கே. சிவகுமார்:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கட்சியின் விசுவாசியாகவும், காந்தி குடும்பம் விசுவாசிகளுக்கு ஆதரவானவர் என்றும் அறியப்படுகிறார். அவர் துணை முதலமைச்சராக பதவி உயர இதுவே சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. கனகபுரா தொகுதியில் இருந்து 8 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், காங்கிரஸ் கட்சியினரிடையே பலமான ஆதரவை பெற்றுள்ளார். அவர் மாநிலத்தின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக பார்க்கப்படும் சூழலில், கட்சிக்கான நிதி திரட்டுவதிலும் இவரே முக்கிய பங்காற்றுகிறார்.
சிவக்குமார் மீது சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையால் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சுமார் 104 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். அவரை முதல்வராக்கினால், பாஜக தலைமையிலான மத்திய அரசு அவர் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க முடியும். ஆனால், டி.கே.சிவக்குமார் மீதான வழக்குகள் தான் பாஜகவை வீழ்த்துவதற்கு அவருக்கான உந்துசக்தியாக உள்ளது. சிறை தண்டனை மட்டுமல்ல, தண்டனை எப்படி வழங்கப்பட்டது என்பதும் அவரை அவமானப்படுத்தியது. அடிக்கடி விசாரணைக்கு அழைப்பது, ஒரு சிறிய, அழுக்கு அறையில் அடைப்பது போன்றவையும் இதில் அடங்கும்.