CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
CM Stalin: தமிழ்நாட்டில் வரும் மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

CM Stalin: அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டம்:
சென்னையில் அமைச்சரவைக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் செயல்கள் மொழிப்போருக்கு வித்திடும் வகையில் உள்ளது. அதற்கு தமிழ்நாடு அரசு தயாரக உள்ளது. நீட், நிதிகுறைப்பு தொடர்பாக ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் பதில் இல்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு:
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியிருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் கிட்டத்தட்ட 8 தொகுதிகளை குறைக்க நினைக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியா வஞ்சிக்கப்படுகிறது. நீட் மும்மொழிக்கொள்கை, உள்ளிட்ட பிரச்னைகள் அனைத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவில் இருந்தால் தான் குரல் கொடுக்க முடியும். தொகுதிகள் குறைக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். ஒட்டுமொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தமிழ்நாட்டிற்கு தான் பாதிப்பு ஏற்படும். தொகுதி மறுசீரமைப்பு மூலம் நாட்டின் எம்.பிக்களின் எண்ணிக்கை 848 ஆக உயர உள்ளது. இந்நிலையில், அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முற்றும் மத்திய - மாநில அரசு மோதல்:
PM SHREE திட்டத்தின் வாயிலாக பள்ளிகளில் மாணவர்கள் மூன்று மொழி கற்பதை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. திட்டத்தை செயல்படுத்தும் வரை, மாநில அரசுக்கான நிதியை வழங்க மாட்டோம் எனவும் தெரிவித்து வருகிறது. ஆனால், இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என, பாஜக தவிர்த்த ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் உரக்க பேசி வருகின்றன. இந்நிலையில் தான், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய அரசு முற்பட்டு வருவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னரே சொன்ன உதயநிதி ஸ்டாலின் | Video
— Raja Shanmugasundaram (@SRajaJourno) February 25, 2025
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு எதிராக மிகப்பெரிய சதியை மத்திய பாஜக அரசு செய்வதாக கடந்த ஆண்டு ABP Network நடத்திய Southern Rising Conclave @Udhaystalin குறிப்பிட்டார்.
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த… pic.twitter.com/4lNrNjl1Is
அன்றே சொன்ன உதயநிதி..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து, ஒரு வருடத்திற்கு முன்னரே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு எதிராக மிகப்பெரிய சதியை மத்திய பாஜக அரசு செய்வதாக கடந்த ஆண்டு ABP Network நடத்திய Southern Rising Conclave-ல் அவர் குறிப்பிட்டார். அப்போது பேசிய அவர், “ ‘நமது தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. அதனை அறுத்தெறிய மிகப்பெரிய மக்கள் புரட்சி ஏற்பட வேண்டும். திமுக எல்லோருக்கும் முன்னர் நின்று, அந்த புரட்சியை தொடங்கும்” என்று உதயநிதி தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

