Champions Trophy Points Table : அரையிறுதியில் இந்தியா& நியூசிலாந்து.. மற்ற அணிகளின் வாய்ப்புகள் என்னென்ன! புள்ளிப்பட்டியல் விவரம்
Champions Trophy Points Table 2025: உலகின் டாப் 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடல் முறையில் நடைப்பெற்று வருகிறது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது, இதுவரை நடந்து முடிந்த ஆட்டங்கள் நடைப்பெற்றுள்ள நிலையில் அரையிறுதிக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெற்றுள்ளது மற்றும் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.
சாம்பியன்ஸ் டிராபி:
உலகின் டாப் 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடல் முறையில் நடைப்பெற்று வருகிறது. 8 அணிகள் மொத்தன் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டது. குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பெற்றுள்ளன, குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்த குரூப் ஏ குரூப் ஆஃப் டெத் என்று அழைக்கப்படுகிறது. இந்த குரூப் தான் பலம் வாய்ந்த குரூப்பாக பார்க்கப்படுகிறது.
அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து:
இதில் குரூப் பி பிரிவில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்களது முதல் இரண்டு போட்டிகளை வென்றதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் போட்டியை விட்டு வெளியேறின. அதே போல் குரூப் ஏ பிரிவில் யார் உள்ளே செல்வார்கள் என்கிற குழப்பம் உள்ளது. அனைத்து அணிகளும் சரிசம பலத்துடன் உள்ளது. இதுவரை தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணி தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ளது. இதனால் இந்த குரூப்பில் அடுத்து நடைப்பெற உள்ள போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக செல்லும்.
அதிக ரன்கள்:
| வீரர் | அணி | ரன்கள் |
| டாம் லாதம் | நியூசிலாந்து | 173 ரன்கள் |
| பென் டக்கெட் | இங்கிலாந்து | 165 ரன்கள் |
| ஷுப்மான் கில் | இந்தியா | 147 ரன்கள் |
| விராட் கோலி | இந்தியா | 122 ரன்கள் |
| ஜோஷ் இங்கிலிஸ் | ஆஸ்திரேலியா | 120 ரன்கள் |
அதிக விக்கெட்டுகள்:
| வீரர் | அணி | விக்கெட்டுகள் |
| மைக்கேல் பிரேஸ்வெல் | நியூசிலாந்து | 5 |
| வில்லியம் ஓ'ரூர்க்கி | நியூசிலாந்து | 5 |
| முகமது ஷமி | இந்தியா | 5 |
| ஹர்ஷித் ராணா | இந்தியா | 5 |
| காகிசோ ரபாடா | தென்னாப்பிரிக்கா | 3 |
புள்ளிப்பட்டியல்:
குரூப் ஏ
| அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | முடிவு இல்லை | |
| 1 | நியூசிலாந்து | 2 | 2 | 0 | 0 |
| 2 | இந்தியா | 2 | 2 | 0 | 0 |
| 3 | பாகிஸ்தான் வங்கதேசம் | 2 | 0 | 2 | 0 |
| 4 | வங்கதேசம் | 2 | 0 | 2 | 0 |
குரூப் பி:
| அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | முடிவு இல்லை | |
| 1 | தென்னாப்பிரிக்கா | 1 | 1 | 0 | 0 |
| 2 | ஆஸ்திரேலியா | 1 | 1 | 0 | 0 |
| 3 | இங்கிலாந்து | 1 | 0 | 1 | 0 |
| 4 | ஆப்கானிஸ்தான் | 1 | 0 | 1 | 0 |





















