மேலும் அறிய

சூர்யாவை மட்டும் பாராட்டுவார்கள்...சினிமாவில் செக்சிஸம் பற்றி நடிகை ஜோதிகா வெளிப்படை

10 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் இருந்தும் திரைத்துறையில் பாலின பேதங்களை எதிர்கொள்வது ஒரு சாதாரணமான விஷயமாக மாறிவிட்டதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்

ஜோதிகா

அஜித்தின் வாலி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், முகவர் , குஷி என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார். வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்களில் நடித்து செம பிஸியான நடிகையாக இருந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை 2006 ஆம் ஆண்டு  திருமணம் செய்துகொண்டார். திருமணத்தைத் தொடர்ந்து நடிப்பை கைவிட்ட ஜோதிகா மறுபடியும் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். 

மகளிர் மட்டும் , ராட்ச்சசி , பொன்மகள் வந்தாள் என தமிழ் சினிமாவில் இரண்டாம் ரவுண்டில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா . தற்போது இந்தியில் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாக இருக்கும் டப்பா கார்டெல் வெப் சீரிஸில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்த சீரிஸின் ப்ரோமோஷனின் போது தனது திரை வாழ்க்கை மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். 

சினிமாவில் செக்சிஸம் சகஜமாகிடுச்சு

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜோதிகா சினிமாவில் பாலின பேதம் குறித்து பேசினார் " சினிமாவில் செக்சிஸம் என்பது ரொம்ப சகஜமாகிவிட்டது.  நான் சூப்பர்ஸ்டாரை திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். இதனால் நானும் அடிக்கடி இதை எதிர்கொள்கிறேன் . நேர்காணல்களில் கூட பாலின பேதம் பார்க்கிறார்கள். சூர்யாவை திருமணம் செய்துகொண்டதற்கு நான் ரொம்ப லக்கி என்று சொன்னால். எல்லாரும் சூர்யா ஒரு நல்ல மனிதர் என்று அவரை பாராட்டுவார்கள். இதுவே என்னைப் பற்றி சூர்யா பாராட்டி பேசினால் அப்படி பேசியதற்கும் அவரைதான் பாராட்டுவார்கள். ஒரு கார் வாங்கினால் கூட அதை முதலில் இன்னொருவர் சோதித்து பார்க்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். இந்த மாதிரி அன்றாட விஷயங்களில் கூட பாலின பேதங்கள் பார்க்கிறார்கள். இந்த மாதிரி நூறு விஷயங்களை என்னால் சொல்ல முடியும் ." என ஜோதிகா தெரிவித்துள்ளார்

டப்பா கார்டெல் 

ஜோதிகா நடித்துள்ள டப்பா கார்டெல் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. ஷபானா ஆஸ்மி, கஜ்ராஜ் ராவ், நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆனந்த், சாய் தம்ஹங்கர், ஜிஷு சென்குப்தா, லில்லேட் துபே, பூபேந்திர சிங் ஜாதாவத் உள்ளிட்டவர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளார்கள். 

 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Embed widget