மேலும் அறிய
Advertisement
நாகையில் அதிகரித்த மத்தி மீன் வரத்து - கிலோ 30 ரூபாய்க்கு விற்பதால் மீனவர்கள் கவலை
கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மத்தி மீன்களின் விலை தற்போது ஒரு கிலோ வெறும் 30 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது
தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட கடற்கரையோர 15 மாவட்டங்களில் அறுபத்தி ஒரு நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் அந்தந்த மாவட்ட துறைமுகப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பது இந்த 61 நாட்களுக்கு தடை செய்யப்பட்ட காரணத்தால் மீன் வரத்து வெகுவாகக் குறைந்தது மீன்களின் விலையும் சந்தையில் பல மடங்கு உயர்ந்துள்ளது.இந்தநலையில் பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர் கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் சென்று மீன்பிடிக்க அனுமதி உள்ள நிலையில் கட்டுமரம் மற்றும் நாட்டுப் படகுகளில்நாகை மாவட்டத்தில் மட்டும் 3,000க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்ட கடற்கரையோரப் பகுதிகளில் மத்தி மீன் சீசன்
தமிழக கடலோர பகுதிகளில் அதிகளவு கிடைக்கும் மத்தி மீன், கேரள மாநிலத்திற்கு பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் புரதச்சத்து நிறைந்த மத்தி மீனை கேரள மாநிலத்தவர் விரும்பி உண்பார்கள். மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் பைபர் படகு மீனவர்களின் வலைகளில் அதிக அளவிலான மத்தி மீன்கள் பிடிபட்டுள்ளது. நாகை, நாகூர், சாமந்தான் பேட்டை, செருதூர், கல்லாறு, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து மீன் பிடிக்க சென்ற பைபர் படகு மீனவர்களுக்கு மத்தி மீன் வரத்து அதிகரித்துள்ளது.
கிலோ 30 ரூபாய்க்கு விலை போவதால் கவலை
ஆனால், மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும், மீன்களின் விலை கடுமையாக குறைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து அதிக அளவு மத்தி மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும் கேரளாவிலும் மத்தி மீன்களின் வரத்து அதிகமானதால் தமிழகத்தில் விலை சரிந்துள்ளதாக தெரிவித்துள்ள மீனவர்கள் கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மத்தி மீன்களின் விலை தற்போது ஒரு கிலோ வெறும் 30 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை மட்டுமே விலை போவதாக கூறினார்கள்.
செலவு செய்த தொகை கூட மிஞ்சவில்லை
5 மாதங்களுக்கு பிறகு நாகை மாவட்டத்தில் பல்வேறு மீனவ கிராமங்களில் பிடித்து வரப்பட்ட மத்தி மீன்கள் ஐஸ் வைத்து கேரளா மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால், கடும் நெருக்கடியில் சூழ்ந்து இருப்பதாக தெரிவித்துள்ள மீனவர்கள், மத்தி மீன்களின் விலை குறைவால் எரிபொருள், ஐஸ், ஆட்கள் கூலி உள்ளிட்ட செலவு செய்த தொகை கூட மிஞ்சவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion