மக்களே கவனம்.. விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க கட்டுப்பாடு.. உயர் நீதிமன்றம் உத்தரவு!
பிளாஸ்டர் ஆப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![மக்களே கவனம்.. விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க கட்டுப்பாடு.. உயர் நீதிமன்றம் உத்தரவு! Vinayagar Chaturthi Madras high court imposes ban on Ganesha idols made of plaster of paris மக்களே கவனம்.. விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க கட்டுப்பாடு.. உயர் நீதிமன்றம் உத்தரவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/02/32350a2bdf6bc5aab83a061c4350527f1725269221801729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வரும் 7ஆம் தேதி, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. பிளாஸ்டர் ஆப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை அனுமதிக்கக் கூடாது என காவல்துறைக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதேபோன்ற கட்டுப்பாட்டை ஏற்கனவே, மும்பை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.
விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்: இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நடப்பாண்ட வரும் செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளும், விற்பனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்து அமைப்புகள் மட்டுமின்றி பொதுமக்களும் விநாயகர் சிலைகளை வாங்கி தங்கள் வீடுகளில் வைத்து வழக்கப்படுவது வழக்கம். இதையடுத்து, கடந்த ஒரு மாதமாகவே விநாயகர் சிலைகள் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு: விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 4 நாள்களே இருப்பதால் உற்பத்தியாளர்கள் விநாயகர் சிலைகள் செய்வதை தீவிரப்படுத்தியுள்ளனர். பெரும்பாலான சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏனென்றால், வர்ணம் உலர்வதற்கு சில நாட்கள் எடுக்கும் என்பதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் வர்ணம் பூச வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை உலரவைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வழக்கத்தை விட நடப்பாண்டில் விநாயகர் சிலைகளுக்கான ஆர்டர்கள் அதிகளவு குவிந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு விதித்துள்ள விதிப்படி 15 அடி வரை விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் பொதுவாக 10 அடிக்கும் குறைவில்லாமல் உயரமாக இருக்கும் என்பதால் அந்த சிலைகளை பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கும் பணிகளில் சிலைகளை ஆர்டருக்கு அளித்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், சென்னை உயர் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பிளாஸ்டர் ஆப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)