டேங்கர் லாரி விபத்து! சாலையில் கொட்டிய டீசல்.. பற்றி எரிந்த பேருந்து! நடந்தது என்ன?
டீசல் டேங்க் உடைந்து லாரியில் இருந்த 20 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டி வீணானது.

வாணியம்பாடி அருகே டீசல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சாலையில் ஆறாக டீசல் ஓடி வீணானது.
டேங்கர் லாரி விபத்து:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை, பெங்களூரில் இருந்து சென்னையிற்கு டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்ததது, அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது டீசல் டேங்க் உடைந்து லாரியில் இருந்த 20 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டி வீணானது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி, கிராமிய காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், சாலை முழுவதும் தேங்கிய டீசலால் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க சாலையில் தண்ணீரை பீச்சி அடித்தும், மரத்தூள்களை சாலை முழுவதும் தூவினர்.
மேலும் விபத்துகுள்ளான லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். இந்நிலையில் இவ்விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மற்ற வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்ப்படக்கூடாத என்பதறகாக சாலையில் மரத்தூள் கொட்டி அசம்பாவிதம் ஏற்படாமல் நெடுஞ்சாலைத்துறையினர் தடுத்தனர். சாலையில் டீசல் ஏற்றிச்சென்ற லாரி, தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து:
இதே போல் சென்னையில் இருந்து பாபநாசம் நோக்கி ஆம்னி சொகுசுப்பேருந்து ஒன்று சென்றுக்கொண்டு இருந்தது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே மங்களமேடு என்ற பகுதியில் சென்ற போது பேருந்தின் டயர் வெடித்துள்ளது. இதை உடனடியாக கண்டுப்பிடித்த பேருந்தின் ஓட்டுநர் பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தினார். சில நொடிகளில் டயர் வெடித்த பகுதியில் தீப்பிடிக்க தொடங்கியது. இதனால் கொளுந்து விட்டு எரிந்த தீயால் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் யாருக்கும் காயம் ஏற்ப்படவில்லை.






















