Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தமிழ்நாட்டில் பெண்கள் மத்தியில் மகளிர் உரிமைத் தொகை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பான 2026 தேர்தலுக்கான பாஜக வாக்குறுதி குறித்து தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில், 2021 சட்டமன்ற தேர்தலில், மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அரசியல் கட்சிகளால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில், 2026 தேர்தலில், அது குறித்த பாஜகவின் வாக்குறுதி தற்போது தெரியவந்துள்ளது. அது என்ன என்று பார்ப்போம்.
மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசிய அண்ணாமலை
கரூரில் நேற்று நடந்த பாஜக பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது, மகளிருக்காக பாஜக செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து பேசினார். அதில் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசிய அவர், டெல்லியில் நாளை பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், முதல் கையெழுத்து, மகளிருக்கு மாதம்தொறும் ரூ.2,500 வழங்கும் திட்டத்திற்கான கையெழுத்துதான் என தெரிவித்தார். மேலும், பாஜகவை பொறுத்தவரை அது மகளிர் உரிமைத் தொகை இல்லை என்றும், தாய்மார்களின் உழைப்பிற்கான காணிக்கை என்றும் செண்ட்டிமென்டாக பேசினார்.
மேலும், தமிழ்நாட்டில், 2026-ல் பாஜகவை ஆட்சிப்பொறுப்பில் அமர வைக்கும்போது, மகளிருக்கு ரூ.2,500-க்கு மேல் வழங்கப்படும் என தெரிவித்தார். அதோடு, திமுகவை கடுமையாக சாடிய அவர், தமிழ்நாட்டில் போடப்படும் 3 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், 30 சதவீதம் வரை, அதாவது, ரூ.90,000 கோடி வரை கமிஷன் அடிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
ஆனால், பாஜக நேர்மையான கட்சி என்றும், அந்த 90,000 கோடி ரூபாய் மக்களுக்கே செலவு செய்யப்படும் என்பதால், மகளிர் உரிமைத் தொகையை ஏற்றி வழங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிவித்தார்.
2026 தேர்தலில் மகளிருக்கு ஜாக்பாட்.!!
அவரது இந்த பேச்சின் மூலம், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், பாஜகவின் ஒரு வாக்குறுதியில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.2,500-க்கு மேல் வழங்கப்படும் என்பது இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. ஆனால், சரியான தொகை தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும். ஒருவேளை ரூ.3,000 வழங்கப்படும் என்று கூட சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் எப்படியாவது பாஜக ஆட்சியை கொண்டுவர வேண்டும் என பாஜக தலைமை துடிப்பதால், அப்படி ஒரு வாக்குறுதியை கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
பாஜக இவ்வாறு வாக்குறுதி கொடுக்கும் பட்சத்தில், மற்ற கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு மகளிர் உரிமைத் தொகையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்படியானால், தமிழ்நாட்டு பெண்களுக்கு ஜாக்பாட்தான்...
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

