மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
சுமார் 40 பேர் காயமடைந்தனர். பாதல்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சரோகான்பூரில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மகா கும்பமேளாவுக்குச் சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சுமார் 40 பேர் காயமடைந்தனர். பாதல்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சரோகான்பூரில் இந்த விபத்து நிகழ்ந்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். இதனிடையே கடந்த மாதம் மௌனி அமாவசையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருந்தது. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுமட்டுமில்லாமல் கும்ப மேளாவுக்கு செல்லும் ரயில்களில் இடம் கிடைக்காமல் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
இது போதாதற்கு ஆங்காங்கே கும்ப மேளாவிற்கு செல்லும் வாகனங்களும் விபத்துக்கு உள்ளாகி உயிர் பலி ஏற்படுகிறது.
கும்ப மேளாவை சரியாக பிளான் பண்ணாததே கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. பாஜக தலைமையிலான அரசு நடத்தும் மகா கும்ப மேளா மரண கும்ப மேளாவாக மாறிவிட்டது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
கும்ப மேளாவுக்கு சென்று உயிரிழந்த மேற்கு வங்க பக்தர்களின் உடல்கள் உரிய ஆவணங்கள் இன்றி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் மகா கும்பமேளாவுக்குச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
பிரயாக்ராஜுக்குச் சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பேருந்து, அரிசி ஏற்றப்பட்ட லாரியின் பின்னால் மோதியது. வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பேருந்தின் முன் பகுதி மோசமாக சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் அவர்கள் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

