கரூர்: ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை - பெண் பக்தர்கள் பங்கேற்பு
ஆலயத்தின் சிவாச்சாரியார் அனைத்து தெய்வங்களுக்கும், தீபாரதனை காட்டினார். பின்னர் பெண் பக்தர்களும், தங்களது திருவிளக்கிற்கு தீப ஆராதனை காட்டிய பிறகு திருவிளக்கு பூஜை சிறப்பாக நிறைவு பெற்றது.
கரூர் மாவட்டம், உழவர் சந்தை பிரம்ம தீர்த்தம் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜை முன்னிட்டு 30க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் திருவிளக்குடன் ஆலயம் வருகை புரிந்தனர்.
அதைத்தொடர்ந்து ஆலயத்தின் சார்பாக வாழை இலை, விளக்கு, எண்ணெய், திரி ,மஞ்சள், சந்தனம், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பொருட்களை வழங்கிய பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் கோவில் திருவிளக்கு ஏற்றி வைத்ததை தொடர்ந்து பக்தர்களும் தங்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து, சிவாச்சாரியார் குங்குமத்தால் 1,008 மந்திரங்கள் கூறினார்.
அதனை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் அனைத்து தெய்வங்களுக்கும், தீபாரதனை காட்டினார். பின்னர் பெண் பக்தர்களும், தங்களது திருவிளக்கிற்கு தீப ஆராதனை காட்டிய பிறகு திருவிளக்கு பூஜை சிறப்பாக நிறைவு பெற்றது. ஆலயத்தின் நடைபெற்ற ஆவணி மாத வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.