மேலும் அறிய

கருவுற்ற தாய்மார்களுக்கு மீண்டும் உதவித்தொகை.. மாஸ் அறிவிப்பை வெளியிட்ட அரசு..

கருவுற்ற பெண்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட உதவித்தொகை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருவுற்ற பெண்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட உதவித்தொகை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மகப்பேறு நிதியுதவி திட்டம் படிப்படியாக இன்று இந்தியா முழுமைக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவும் திட்டமாக மாறியுள்ளது. 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ரூ.6000/- வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 2011-2012 ரூ.12,000/- மற்றும் தற்பொழுது ரூ.18,000/- ஆக உயர்த்தி முதல் இரு கர்ப்பத்திற்கு ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு தனது பங்களிப்பாக ரூ.3000 வழங்கியது. இதோடு மாநில அரசின் பங்களிப்பு ரூ:15000த்தோடு சேர்த்து ரூ.18,000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் 14,000 ரூபாய் ரொக்கமாகவும், ரூ.4000 மதிப்பிலான 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2018க்கு பிறகு 5 தவணைகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பம் தரித்த 3வது மாதம் ரூ.2000 மும், 4வது மாதம் ரூ.2000 மும், குழந்தை பிறந்தவுடன் ரூ.4000-மும், குழந்தை பிறந்து 3 மாதம் கழித்து ரூ.4000 மும். 9 மாதம் கழித்து ரூ2000 என்று ரூ14,000 த்தோடு ரூ.4000 மதிப்பிலான 2 பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுத்திய திட்டம் என்பதால், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 20 என்ற இரண்டு திட்டங்களும் ஒருங்கிணையும்போது, பயனாளிகளின் பட்டியல் தயாரிப்பதில் மாறுபட்ட நிலை உருவானது. இதனால் 2 ஆண்டுகளாக முதல் தவணை தொகை பயனாளிகளுக்கு சென்று சேருவதில் சிறிய தாமதம் ஏற்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மத்திய அரசிடம் தொடர்ந்து இதுகுறித்து பேசப்பட்டு வந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறையும், மத்திய அரசின் சார்பில் சமூக நலத்துறையும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இந்த இரு துறைகளின் வளைதளத்தில் உள்ள குறைகளை கலைவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த வாரம் இதற்கு தீர்வு ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, புதியதாக சீரமைக்கப்பட்டு, 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த தொகை இனிமேல் 3 தவணைகளாக வழங்கப்படவுள்ளது. கர்பம் தரித்த 4வது மாதம் ரூ.4000-மும், குழந்தை பிறந்தவுடன் ரூ.4000-மும், குழந்தை பிறந்து 4 மாதங்கள் கழித்து ரூ.6000-மும் என்று ஆக மொத்தம் ரூ.14,000 ரொக்கமாகவும், முதல் மற்றும் இரண்டாம் தவணைகளில் ஊட்டச்சத்து பெட்டகமும் இணைத்து தரப்படவுள்ளது. இதற்கு முன்பு குழந்தை பிறந்து 9 மாதங்கள் கழித்து கடைசி தவணை வழங்கப்பட்டு வந்தது. தற்போது குழந்தை பிறந்து 4வது மாதமே கடைசி தவணை வழங்கப்படவுள்ளது. மேலும், இதற்கு முன்பு ஒன்றிய அரசு ரூ.3000 வழங்கியவுடன் தான் மாநில அரசு தனது பங்களிப்பை வழங்கப்படும் என்ற நிலை மாறி ஒன்றிய அரசு காலதாமதமாக தனது பங்களிப்பு தொகையை வழங்கினாலும், மாநில அரசு தனது பங்கு தொகை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இனிமேல் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் தொகையில் காலதாமதம் இல்லாத வகையில் இந்த திட்டம் புதுவடிவம் பெற்றுள்ளது. மத்திய அரசு முதல் பெண்குழந்தைக்கு ரூ.3000-மும், இரண்டாவது பெண் குழந்தைக்கு ரூ.6000-மும் தருகிறார்கள். இன்று டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 20 ஒன்றினைத்து புதுப்பித்து துவக்கி வைக்கப்பட்டு 1,06,766 பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கிய 2006 முதல் இதுவரை 1,16,95,973 பயனாளிகளுக்கு ரூ.10,529.57 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாருக்கேனும் விடுபட்டிக்கும் நிலை இருக்குமானால் உடனடியாக அந்தந்த மாவட்ட சுகாதார துணை இயக்குநர் அவர்களிடம் முறையிட்டு சரி செய்துக் கொள்ளலாம், அல்லது 104 என்கின்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பிட்டுதிட்டம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டம் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான நிலையில் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 8,12,175 புதிய பயனாளர்கள் சேர்ந்திருக்கின்றனர், என்றாலும் புதிது புதியதாக குடும்பங்கள் உருவாகின்றது. எனவே அவர்களுக்கும் இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு 100 இடங்களில் புதிய காப்பீட்டு திட்டம் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற 18.11.2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ்நாட்டில் 100 இடங்களை தேர்ந்தெடுத்து, அந்த இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படவிருக்கிறது. இந்த முகாம்களில் காப்பீட்டு திட்டத்தில் அட்டைகள் பெறாதவர்கள் கலந்து கொண்டு காப்பீட்டு அட்டை பெற்று பயனடையுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம். மேலும் பலர் கடந்த 2006 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களால் வழங்கப்பட்ட கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டையினை வைத்திருக்கிறார்கள். அந்த அட்டை தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்று ஆராய்ந்து புதிய அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
Embed widget