TN Rain: இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை இருக்கு: எச்சரிக்கை மக்களே..!
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 10.30 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![TN Rain: இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை இருக்கு: எச்சரிக்கை மக்களே..! Tamilnadu weather updates rain over places 18 districts today july 31st 2024 TN Rain: இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை இருக்கு: எச்சரிக்கை மக்களே..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/31/27e1a8308e64b77b99dedbe8c2d4c2411722437236013572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் இன்று இரவு 10. 30 மணிவரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.
18 மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று இரவு 10.30 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 31, 2024
மேலும், வானிலை தொடர்பாக வானிலை மையம் தெரிவித்ததாவது, நாளைய தினம் கோவை மற்றும் நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும் வரும் 6 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 31, 2024
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)