மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: வைத்திலிங்கம் வீட்டில் ED ரெய்டு! தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு; முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை
- சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் வைத்திலிங்கத்திற்கான அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு – ஒரத்தநாடு அருகே உள் இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை
- வங்கக்கடலில் உருவாகியுள்ள டாணா புயலால் தமிழ்நாட்டிற்கு நேரடி பாதிப்பு இல்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்
- கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் 8 செ.மீட்டர் மழை – ஈரோடு, திருப்பூரிலும் கொட்டித் தீர்த்த கனமழை
- தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தொடர்ந்து தடை நீட்டிப்பு
- வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்திரவதை செய்த விவகாரம் – சிறைத்துறை டி.ஜி.ஜி., கூடுதல் கண்காணிப்பாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
- தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து; 31 ஆயிரம் கன அடி நீர் வரவால் ஒகேனக்கல்லில் 11வது நாளாக பரிசல் போக்குவரத்திற்கு தடை
- 47 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் முதல் கன்னியாகுமரி, செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கம் – இன்று தொடங்கிய முன்பதிவு
- தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
- திருக்கழுக்குன்றம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; நீர்மட்டம் 90 அடியை எட்டியது
- கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை; மேட்டுப்பாளையத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்
- தொடர் மழை காரணமாக கோவை, திருப்பூர் மாவட்ட பள்ளிகள் மற்று் கல்லூரிகளுக்கு விடுமுறை
- தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அ.தி.மு.க.வின் செல்வாக்குதான் சரிந்துள்ளது – எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மணப்பாறை பால்கோவிற்கு பெரும் வரவேற்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion