TN Rain News Today LIVE : சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு
Tamil Nadu Rain Update LIVE: சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
LIVE

Background
சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
அடுத்த 3 மணிநேரத்தில் 28 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்
அடுத்த 3 மணி நேரத்திற்குள் 28 மாவட்டங்களில் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் நீர்வரத்து 2,200 கனஅடி..!
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 2,200 கன அடியாக உள்ளது. இதையடுத்து ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1, 000 கன அடியாக நீடிக்கிறது.
TN Rain News Today LIVE : சென்னையில் மீண்டும் மீண்டும் மழை..!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி, பெருங்குடி, கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போதுவரை கனமழை நீடித்து வருகிறது.
TN Rain News Today LIVE : சென்னையில் மழை தொடரும்.. எச்சரிக்கும் வானிலை மையம்!
சென்னையில் மழை தொடரும் என்றும், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

