TN Headlines: இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- Polio Camp: இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. பெற்றோர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்
இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் போலியோ நோயால் (இளம் பிள்ளை வாதம்) பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தவணை முறையில் சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. மேலும் படிக்க
- BJP Candidates : சர்ச்சைக்குரிய எம்பிக்கள்.. பாஜக வைத்த செக்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா?
அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் படிக்க
- பரபரப்பு.. மும்பையை அதிரவிட்ட பார்சல்.. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லவிருந்த 'அணு ஆயுதம்'
பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இயந்திரத்தை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை மும்பையில் வைத்து தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் படிக்க
- TN Weather Update: மண்டையை பொளக்கப்போகும் வெயில்! இன்னும் 3 டிகிரி அதிகரிக்கும் - வானிலை மையம் அலர்ட்!
கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாது அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் இந்த வெப்பநிலை நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரொட்டில் 38.6 டிகிரி செல்சியஸும் கரூரில் 37 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. மேலும் படிக்க
- PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்! நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி - தலைநகரில் மிரள வைக்கும் பொதுக்கூட்டம்!
பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில் நான்காவது முறையாக ஒருநாள் பயணமாக நாளை தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். கடந்த வாரம் தமிழகம் வந்த பிரதமர் மோடி, பல்லடம் மற்றும் நெல்லையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். மேலும் படிக்க