Ponmudi Case: ஆளுநர் என்ன செய்கிறார்? இதை சீரியசாக பார்க்கிறோம்; பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் கறார்
Supreme Court Condemn Governor RN Ravi: பொன்முடியை அமைச்சராக பிரமாணம் செய்யாததை எதிர்த்து தொடரபட்ட வழக்கில், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்யாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆளுநர் என்ன செய்கிறார் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்கள். தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என எதன் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நாளைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்காவிட்டால், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#BREAKING #SupremeCourt criticises #TamilNadu Governor for not appointing Ponmudi as Minister.
— Live Law (@LiveLawIndia) March 21, 2024
CJI DY Chandrachud : Mr Attorney General, what is your Governor doing? The conviction has been stayed by the Supreme Court and Governor says he won't swear him in!. We will have to… pic.twitter.com/LxE3HqtxCH
பொன்முடியை அமைச்சராக்க தமிழ்நாடு அரசு சார்பாக பரிந்துரைத்த போதிலும், ஆளுநர் பதவி பிரமாணம் செய்து மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழ்நாடு சார்பாக ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொன்முடியை அமைச்சராக பதவி பிராமாணம் செய்ய மறுப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் அளித்தது யார் என கேள்வி எழுப்பினர். பொன்முடியை அமைச்சராக்க பதவி பிரமாணம் செய்து வைக்க கூறினால், அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆளுநர் எப்படி கூற முடியும். அரசியல் சாசனத்தை ஆளுநர் பின்பற்றவில்லை என்றால் மாநில அரசு என்ன செய்ய முடியும்.
பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என கூறுவதை ஏற்க முடியாது. ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளது. நாங்கள் கண்களை மூடவில்லை.
CJI DY Chandrachud to AG : We will give time till tomorrow for the Governor, otherwise...otherwise..#SupremeCourtofIndia #TamilNadu
— Live Law (@LiveLawIndia) March 21, 2024
நாளைக்குள் முடிவுகளை எடுக்காவிட்டால், தகுந்த நடவடிக்கை நேரிடும் என்று உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது.