மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாட்டுக்கு கிடைத்த தங்கமகன் - அமைச்சர் புகழாரம்!
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை இன்று சந்தித்தார் .

மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாட்டுக்கு கிடைத்த தங்கமகன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் புகழ்ந்துள்ளார்.
சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில், மாரியப்பன் தங்கவேலு இன்று தலைமைச் செயலகத்தில் விளையாட்டு துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வாழ்த்து பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நடைபெற்று முடிந்த பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தமிழ்நாட்டுக்கு கிடைத்த தங்க மகன் என்று புகழ்ந்தார்.
Silver Medalist Mariyappan: தொடர்ச்சியாக பதக்கங்கள்.. வாழ்த்து மழையில் நனையும் மாரியப்பன்..!
முதலமைச்சரை சந்தித்த மாரியப்பன் தனக்கு அரசு பணி தருமாறு கேட்டுக் கொண்டதை பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு விளையாட்டு துறை அமைச்சர், எங்கள் தரப்பில் இருந்தும் மாரியப்பன் வைத்த கோரிக்கையை முதலமைச்சரிடம் சென்று சேர்ப்போம் என்று கூறினார்.
டெல்லியில் இருந்து நேற்று சென்னை திரும்பிய மாரியப்பன் சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சரை சந்தித்தபின் மாரியப்பன் அளித்த பேட்டியில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நான், ஜப்பானில் தங்கம் வெல்ல முடியாதற்கு காரணம் அங்குள்ள தட்ப வெட்ப நிலையே என்று கூறினார். முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றது மகிழ்ச்சி அளித்ததாகவும், அரசு பணி வழங்க கோரிக்கை வைத்ததை அடுத்து அதற்கு கண்டிப்பாக கணக்கில் கொள்வதாக கூறியிருப்பதாகவும் கூறினார். மேலும், பிரதமரிடம் தொலைபேசியில் பேசியபொழுது, தன் அருகாமையில் குடியிருக்கும் நபரிடம் பேசுவதை போல் பேசியதாகவும் பாராட்டியதாகவும் கூறினார்.
Tamil Nadu | Mariyappan Thangavelu welcomed at Chennai airport upon return to his native state. He won the Silver medal for India in High Jump (Sport Class T42) at #TokyoParalympics pic.twitter.com/HqiccrClgr
— ANI (@ANI) September 5, 2021
முன்னதாக, கடந்த 3-ஆம் தேதி மாரியப்பன் தங்கவேலு நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, மத்திய சுகாதரத்துறை அமைச்சரை சந்திக்க டெல்லி சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமான நிலையத்தில் மாரியப்பனுக்கு வரவேற்பு அளித்தார். இந்த நிலையில், இன்று சென்னை திரும்பிய அவர், முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றதற்காக மாரியப்பனுக்கு தமிழக அரசு ரூபாய் 2 கோடி பரிசாக அறிவித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் மாரியப்பனை பாராட்டினார். இதேபோல், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனும் மாரியப்பனை தொலைபேசியில் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mariappan | சின்ன சின்ன அன்பில்தானே.. மாரியை தோளில் சுமந்த சந்தீப் - நெகிழ்ச்சி வீடியோ!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

