Mariappan | சின்ன சின்ன அன்பில்தானே.. மாரியை தோளில் சுமந்த சந்தீப் - நெகிழ்ச்சி வீடியோ!
பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பனை தன் தோளில் சுமந்து சென்றார் சக வீரரும், ஈட்டி எறிதலில் பங்கேற்றவருமான சந்தீப்
ஒலிம்பிக் பதக்கங்களை இன்று இந்தியாவே கொண்டாடி வருகிறது. ஒலிம்பிக் மட்டுமின்றி பாராலிம்பிக்கையும் உன்னிப்பாக கவனிக்கும் மக்கள் தங்களில் ஒருவர் விளையாடுவதாகவே நினைக்கின்றனர். மொழி கடந்தும், மதம் கடந்து அனைவரும் பிரார்த்திக்கின்றனர். இந்தியா பதக்கத்தை வேட்டையாட வேண்டுமென மனதார நினைக்கின்றனர். இந்த அளவுக்கு விளையாட்டு நம்மை ஒன்றிணைக்கிறது என்றால் அதற்கு பின் இந்தியர்கள் என்ற அன்பின் வலை சிக்கிக் கிடக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாய் நடந்துள்ளது ஒரு சம்பவம்.
இன்றைய பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பனை தன் தோளில் சுமந்து சென்றார் சக வீரரும், ஈட்டி எறிதலில் பங்கேற்றவருமான சந்தீப். கால் முடியாத மாரியப்பனை தோளில் சுமந்து தன் அன்பை பரிமாறினார் சந்தீப். கடந்த முறை தங்கம் வென்ற இந்த முறை வெள்ளி வென்று சாதித்துள்ளார். அவரது சாதனையை சந்தீப் மட்டுமின்றி இந்தியாவே கொண்டாடியும் வருகிறது. மாரியப்பனை சந்தீப் தோளில் சுமந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விளையாட்டால் நாம் ஒன்றிணைவது இதனால் தான் என அனைவரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையிலேயெ நெகிழ்ச்சியான தருணம் என அனைவரும் பதிலளித்து வருகின்றனர். மாரியப்பனை சுமந்து சென்ற சந்தீப்பும் ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்றவர் ஆவார்.
முன்னதாக, டோக்கியோ பாராலிம்பிக்கில் தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில், மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கமும் ஷரத் குமாருக்கு வெண்லகப் பதக்கமும் கிடைத்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் மாரியப்பன். தங்கத்தை தவறவிட்டாலும் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு இந்திய மக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தின் பெரியவடுகம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு சிறுவயதாக இருக்கும்போதே இவருடைய தந்தை குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இதன் காரணமாக 6 குழந்தைகளையும் இவருடைய தாய் சரோஜா பல கூலி வேலைகளை செய்து காப்பாற்றி வந்துள்ளார். இதன்காரணமாக படித்து முன்னேற வேண்டும் என்று மாரியப்பன் நினைத்துள்ளார். எனினும் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்து இவருடைய வாழ்க்கையே புரட்டி போட்டுள்ளது. 9 வயது சிறுவனாக இருந்த மாரியப்பன் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். அதில் பேருந்தின் சக்கரம் இவருடைய கால்கள் மீது ஏறியுள்ளது. இதனால் தன்னுடைய ஒரு காலை இவர் இழக்கும் நிலை ஏற்பட்டது.
Bronze Medalist Sharad Kumar: ஒரே போட்டியில், மாரியப்பனுக்கு டஃப் கொடுத்த இந்திய வீரர் யார்?
The reason why sports unite us all, the strongest emotion there ever is
— SAI Media (@Media_SAI) August 31, 2021
Take a 👀 at how Paralympian @sandeepjavelin is celebrating @189thangavelu 🥈 win at #Tokyo2020 #Paralympics
It’s heartwarming to see our para-athletes supporting each other#Cheer4India#Praise4Para pic.twitter.com/DOZFXbahT4