மேலும் அறிய

H.Raja BJP: ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு

H.Raja BJP: அவதூறு வழக்குகளில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது.

H.Raja BJP: அவதூறு வழக்கில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எச்.ராஜாவிற்கு சிறை தண்டனை

பெரியார் சிலையை உடைப்பேன் என பேசியது மற்றும் மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடர்பாக அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில், தலா 6 மாத காலம் சிரைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஒரு வருட காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளிநாட்டில் சிறப்பு கல்விக்காக சென்று இருந்தபோது, எச். ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு தான் கட்சியை வழிநடத்தி வந்தது. இந்நிலையில் நேற்று தான் அண்ணாமலையில் தமிழ்நாட்டிற்கு திரும்பிய நிலையில், இன்று எச். ராஜாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

வழக்கு விவரம்:

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும்  பல்வேறு காவல்நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளித்தக்கபட்டது. இந்த புகாரில் 7 வழக்குகள் ஹெச். ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யபட்டன. ஈரோடு நகர் காவல்துறை, கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில்  அளித்த புகாரில் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யபட்டது.

வழக்கு விசாரணை தீவிரம்

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஹெச். ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணை முடிக்க சென்னை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன் நடைபெற்றது.
பெரியார் சிலை உடைக்க வேண்டும் என பதிவிட்டதற்கான எதுவும் ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை எனவும், எம்.பி. கனிமொழி மீதான கருத்து  அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் எதனையும் விசாரணை அதிகாரி மற்றும் புகார்தாரர் தாக்கல் செய்யவில்லை, எனவே வழக்கின் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என எ. ராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 14 ம் தேதி தள்ளிவைத்த நீதிபதி ஜெயவேல்  இந்த இரண்டு வழக்குகளில் தீர்ப்பளித்தார். அதன்படி, இரண்டு வழக்குகளிலும் தலா 6 மாதங்கள் எச். ராஜாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவர் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் விரைவில் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
Expensive Passport: இவ்வளவு காசு கட்டணுமா..! உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் எது? லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Expensive Passport: இவ்வளவு காசு கட்டணுமா..! உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் எது? லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Rashmika Mandana:
Rashmika Mandana: "தேசிய விருது கன்ஃபார்ம்" அடித்துச் சொல்லும் புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா!
Embed widget