மேலும் அறிய

தோட்டத்தில் மனைவியை கடித்த பாம்பு.. கணவர் செய்த காரியம் என்ன தெரியுமா?

நாமக்கல்லில் தனது மனைவியை கடித்த பாம்பை அவரது கணவர் அரசு மருத்துவமனைக்கு ஆதரத்திற்க்காக எடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பூமியில் மிகவும் கொடிய மற்றும் விஷமுள்ள உயிரினங்களில் முக்கிய இடத்தில் உள்ளது பாம்பு வகைகள். பாம்பு என்றால் படையும் என்பது ஊர் அறிந்த உண்மை. எவ்வளவு பெரிய தைரியசாலி, பலசாலியாக இருந்தாலும் பாம்பு முன் வந்தால் சிறு நடுக்கம் ஏற்பட்டு, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஒரு சிலிர்ப்பை தரும்.  WHO (உலக சுகாதார அமைப்பின்) அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 81,000 முதல் 1,38,000 பேர் பாம்புக் கடியின் விளைவாக இறக்கின்றனர். 

அதேபோல், பாம்பு கடியால் பலரது வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டும் இருக்கிறது. ஆனால் சில சம்பவங்கள் மக்களை முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நேரங்களும் உள்ளன. அந்த வகையில், நாமக்கலில் தனது மனைவியை கடித்த பாம்பை அவரது கணவர் அரசு மருத்துவமனைக்கு ஆதரத்திற்க்காக எடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான ரேவதி. இவர் தனது கணவர் சக்திவேலுடன் தென்னை மர தோப்பிற்கு கூலி வேலைக்காக சென்றுள்ளார். இவர்களுடன் சென்று மேலும் 15 லிருந்து 20 பேர் தோப்பில் வேலை பார்த்து வந்துள்ளனர்.  தென்னை மர தோப்பை சுற்றி செடி, கொடி படர்ந்து அடைந்து இருந்ததால் எங்கு என்ன இருக்கிறது யாரும் தெரியவில்லை. 

இந்த நிலையில், ரேவதி வழக்கம்போல் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரேவதியை கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி தன்னை பாம்பு கடித்தது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, தனது மனைவி ரேவதியை கடித்த பாம்பை சக்திவேல் அங்கிருந்த சக வேலையாட்கள் உதவியுடன் லாபகமாக பிடித்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலுக்கு அடைத்தார். சக்திவேல் தொடர்ந்து தனது மனைவி ரேவதியை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அழைத்து சென்றிருக்கிறார். 

அப்போது, தன்னை கடித்த பாம்பை அடையாளம் காண்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக கொண்டு வந்துள்ளதாக ரேவதி மருத்துவரிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து ரேவதிக்கு முதலுதவி செய்யப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
Embed widget