Madhubani Painting : புதுச்சேரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி வரைந்த மதுபனி ஓவியம்
Madhubani : புதுச்சேரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு, கர்ப்பிணி பெண் 9 அடி நீளம் 7 அடி அகலத்தில் மதுபானி ஓவியம் வரைந்துள்ளார்

Madhubani Painting : புதுச்சேரி: மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் கர்ப்பிணி பெண் 9 அடி நீளம் 7 அடி அகலத்தில் மதுபானி ஓவியம் வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஓவியர் சோலை அபிராமி. இவர் ஓவியர் ஆசிரியராகவும் உள்ளார். தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளை பெரிய அளவில் ஓவியங்களாக தீட்டி வரும் இவர், மகளிர் தினத்தை முன்னிட்டு, தனது இல்லத்தில் 9 அடி நீளம் 7 அடி அகலத்தில் மதுபானி ஓவியம் வரைந்துள்ளார். இந்த ஓவியத்தில் பூமாதேவி கர்ப்பிணி பெண்ணை தாங்குவது போலவும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவும் தீட்டப்பட்டுள்ளது. இந்த மாதம் பிரசவம் நடைபெற உள்ள நிலையில் இந்த ஓவியம் வரைந்ததை இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் பார்த்து ஓவியரை பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து பேசிய ஓவியர் சோலை அபிராமி, தொடர்ந்து பல ஆண்டுகளாக வித்தியாசமான முறைகளில் ஓவியம் தீட்டி வருவதாகவும், மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வட மாநில கலாச்சார மதுபானி ஓவியம் வரைந்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இடைவெளி இல்லாமல் வரையப்பட்ட ஓவியத்தை இந்தியன் புக்-ஆப் ரெக்கார்ட் சாதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

