தேடிக்கண்டுபிடித்து ஆசை ஆசையாய் ராகுல்காந்தி வாங்கிய நாய்க்குட்டி! - என்ன வகை தெரியுமா?
கரூர் உட்பட்ட எல்.ஜி.பி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். நாய்கள் வளர்ப்பிலும், பயிற்சி கொடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர். எங்கு நாய்கள் கண்காட்சி நடந்தாலும் பங்கு பெற்று பரிசுகளை வென்று வருகிறார்.
கடந்தாண்டு கேரள காவல்துறையில் இடம் பெற்ற Jack Russell Terrier வகை நாய்கள் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை கவர்ந்துள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எல்.ஜி.பி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். நாய்கள் வளர்ப்பிலும், அதற்கு பயிற்சி கொடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர். தமிழகத்தில் எங்கு நாய்கள் கண்காட்சி நடந்தாலும் ஆர்வமுடன் பங்கு பெற்று பரிசுகளை வென்று வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக நாய்களை வளர்த்தும், அதற்கு பயிற்சிகள் அளித்தும், விற்பனை செய்தும் வருகிறார். அதற்கென தனியாக வெப்சைட் மற்றும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக Jack Russell Terrier வகை நாய்களை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை பராமரித்தும், விற்பனை செய்தும் வருகிறார். இந்த நாய்களின் பூர்வீகம் இங்கிலாந்து என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த வகை நாய்கள் குறித்து கேள்விப்பட்டு சரவணனை பார்ப்பதற்கு தனது குழுவினரை அனுப்பி உள்ளார். அவர்கள் கரூருக்கே நேரடியாக வந்து நாய்க்குட்டிகளை ஆய்வு செய்து ராகுல் காந்தியை சந்திக்க நேரடியாக அழைத்துச் சென்றுள்ளனர். நாய் குட்டிகளுடன் சென்ற சரவணனை வரவேற்ற ராகுல் காந்தி சுமார் அரை மணி நேரம் உரையாடியதாகவும், அந்த நாய்கள் குறித்தும், அதன் சந்ததி குறித்தும் தெளிவாக கேட்டறிந்து அதில் தனக்கு பிடித்த ஒரு ஆண் நாய் குட்டியை வாங்கியுள்ளார்.
செல்ல பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்ட ராகுல் காந்தி தன்னிடம் நாய்க்குட்டி ஒன்றை வாங்கியதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட சரவணன், Jack Russell Terrier வகை நாய்களை தமிழக காவல்துறைக்கும் விரைவில் வழங்க உள்ளதாக தெரிவித்தார். இதேபோல், கடந்த ஆண்டு கேரளாவில் இருந்து வந்த காவல் துறை அதிகாரிகள் குழுவினர் சரவணனின் வளர்ப்பு நாய்களை பார்வையிட்டு ஆய்வு செய்து அதில், டாக்டர், வெடிகுண்டு நிபுணர் ஆகியோர் வழங்கிய சான்றிதழ், ஊசி போடப்பட்டுள்ள விபரங்களை கேட்டறிந்து, 2 ஆண் குட்டி நாய்களையும், 2 பெண் குட்டி நாய்களையும் வாங்கிச் சென்றனர்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial