டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
மேட்டூர் அணையை நம்பி கிட்டத்தட்ட 12 மாவட்டத்தில் உள்ள 16.40 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மேலும் இந்த தண்ணீர் மூலம் 20 மாவட்டத்தினுடையை குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார், இதன்மூலம் 17.15 விவசாய நிலங்கள் பாசன வசதிப்பெறும்.
மேட்டூர் அணை
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மூலமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் பாசன் வசதிப்பெறுகின்றன, மேட்டூர் அணையை நம்பி கிட்டத்தட்ட 12 மாவட்டத்தில் உள்ள 16.40 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த தண்ணீர் மூலம் 20 மாவட்டத்தினுடையை குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
சென்ற ஆண்டு தாமதம்:
சென்ற ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக பெய்ததால் கர்நாடகா நீர் திறப்பை தாமதப்படுத்தியது. இதனால் ஜூலை மாதம் தான் குறுவை சாகுபடிக்குன் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு கர்நாடகாவில் நல்ல மழை பெய்ததால் அங்கிருந்து தண்ணீர் அதிகளவு வந்தது, வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததன் காரணமாக மேட்டூர் அணையில் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை இருந்து வருகிறது.
தற்போது நீர் இருப்பு எவ்வளவு:
மொத்தம் 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையில் 94 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைத்திக்கொள்ள முடியும். தற்போது அணையில் 85.15 டிஎம்சி வரை தண்ணீர் இருப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம்114.62 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் அளவு வினாடிக்கு 5146 கன அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்கு 1000 கன அடி திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர்:
இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் இன்று மேட்டூர் அணையை மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் இன்று திறக்கப்பட்ட நீரானது சில நாளில் மாயனூர் கதவணை, மேலணையை அடைந்து வருகிற 15 ஆம் தேதி கல்லணையை அடையும். அதன் பிறகு 15 ஆம் தேதி அணையானது டெல்டா பாசனம் மற்றும் குறுவை சாகுபடி மேற்கொள்ள உதவும், இதற்கான பணிகளை விவசாயிகள் மேற்க்கொண்டு வருகின்றனர்.
தற்போது முதற்கட்டமாக 3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது, இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 12000 கன அடியாக திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது
உத்தரவு பிறப்பித்த காவிரி ஒழுங்காற்று குழு:
இதற்கிடையில் காவிரி நீர் முறைப்படுத்தும் காவிரி ஒழுங்காற்றுகுழுவின் 116வது கூட்டம் டெல்லியில் செவ்வாய்கிழமை(10.06.25) நடைபெற்றது. அதில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன் மாதம் திறந்து விட வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை தடையில்லாமல் திறந்து விட கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டுள்ளது.






















