குடியரசு தின அலங்கார ஊர்திகள் குறித்து தவறான தகவல்களை திமுக அரசு பரப்புகிறது - அண்ணாமலை
’’பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துள்ள 2014 முதல் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளில் 5 முறை குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்தி பங்கேற்பில் தமிழகத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’’
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் புதிய அலுவலகம் திறப்புவிழா பைபாஸ் ரவுண்டானா அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் ஏற்பாடு செய்யப்பட்டு, அண்ணாமலை அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த புதிய கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது, குடியரசுதின விழாவில் தமிழகத்தின் சார்பாக சென்றிருக்க கூடிய அலங்கார ஊர்தி இது குறித்து எதிர்க்கட்சிகள் அபாண்டமான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். ஆண்டுதோறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து அந்தந்த மாநிலத்தின் பிரதிபலிக்கும் ஒரு அலங்கார உறுதியை பங்கேற்கும். இது முற்றிலும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்து எந்த மாநிலத்தில் இருந்து யார் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்வார்கள்.
குடியரசு தின விழாவில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் அலங்கார ஊர்தி பங்கேற்கும் பெருமை நமது தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வ.உ.சி இவர்கள் மையமாக வைத்து தமிழக அரசு சொன்ன போதும் இந்த தலைவர்கள் யாருமே உலக அளவில் பிரசித்தி பெற்ற வில்லை. ஆனால், வேண்டாம் என்று மத்திய அரசு கூறிய தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து கொண்டிருக்கின்றார்கள். அதுபோல் நடக்கவில்லை. முற்றிலும் தவறான விஷயத்தை திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் பரப்பி கொண்டு இருக்கின்றனர்.
வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாளில் பிரதமர் மோடி முகநூல் பக்கத்தில் அவர் குறித்து பதிவு செய்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அவருக்கு விழா நடத்தினோம். வ.உ.சிக்கு சொந்த ஊரில் சென்று அவருக்கு விழா நடத்தினோம். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் விழாவாக கொண்டாடினர். இந்த வருடம் மத்திய அரசும், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த காரணத்திற்காக அழைக்கவில்லை என்று கூறவில்லை. இந்த காரணங்களுக்காக நிராகரிக்கவில்லை என கூறவில்லை. இந்தியா 75 கருத்துருவிற்கு எந்த மாநிலம் சரியாக வருகிறதோ, அந்த மாநிலத்திற்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2016 -17 ஆம் ஆண்டுகளில் தமிழகத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை 2019, 2020, 2021 ஆண்டுகளில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துள்ள 2014 முதல் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளில் 5 முறை குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்தி பங்கேற்பில் தமிழகத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு 6 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறார்கள். இதற்கு மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை , திமுக எப்போதும் வீரமங்கை வேலுநாச்சியார் மரியாதை கொடுத்தது கிடையாது. மகாகவி பாரதியாருக்கு மரியாதை கொடுத்தது கிடையாது என அண்ணாமலை தெரிவித்தார்.