மேலும் அறிய

Dengue Issue: பரவும் டெங்கு காய்ச்சல், தமிழ்நாடு அரசு செய்யப்போவது என்ன? : தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாவதை தடுப்பது குறித்து, தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாவதை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று துறைசார் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஆலோசனைக் கூட்டம்:

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. தலைமை செயல்கத்தில் நடைபெற உள்ள இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரம், பொதுப்பணித்துறை மற்றும் துறைச்சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில்,  டெங்கு கொசு ஒழிப்பில் கூடுதலாக கவனம் செலுத்துவது,  டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. அதோடு, குடியிருப்பு பகுதிகளில் கொசு உற்பத்தியாவதை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பாதிக்கப்படுவோருக்கு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்க தேவையான  மருந்து உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்து இருப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டெங்கு காய்ச்சல்:

மழைக்காலம் தொடங்கினாலே டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். நடப்பாண்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி  கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்மையில் கூட, மதுரவாயலை சேர்ந்த ரக்‌ஷன் எனும் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சிறுவனின் குடும்பம் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ”சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேட்டைச் சரி செய்யாத திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்து இருந்தார். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதை தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Metro Train: சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Metro Train: சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
Lok Sabha Election 2024 LIVE:குடும்பத்துடன் வாக்களித்தார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
Lok Sabha Election 2024 LIVE: குடும்பத்துடன் வாக்களித்தார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால்  ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
Mettur Dam: குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படுமா மேட்டூர் அணை? -  கவலையில் டெல்டா விவசாயிகள்
குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படுமா மேட்டூர் அணை? - கவலையில் டெல்டா விவசாயிகள்
Embed widget