BREAKING LIVE : தமிழ்நாட்டின் புதிய டிஜிபி சைலேந்திர பாபு
சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாகவும் முத்திரை பதித்தவர் புதிய டிஜிபி சைலேந்திர பாபு.
LIVE
Background
தமிழ்நாட்டின் சட்டம் & ஒழுங்கு புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய டிஜிபி திரிபாதி நாளாயுடன் ஓய்வு பெறும் நிலையில் தமிழ்நாட்டின் 30ஆவது சட்டம்&ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பேற்க உள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனையில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி., என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்றுள்ளார். மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு போலீஸ் காவல் வழங்க சைதாபேட்டை நீதிமன்றம் மறுப்பு
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறை மனு தாக்கல் செய்து இருந்தனர். சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் மோகனாம்பாள் காவல் வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளார்.
T20 WC Dates, Venue Confirmed: அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை
பாலியல் தொல்லை வழக்கில், சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துச்சென்று சிவசங்கர் பாபாவிடம் விசாரணை..!
பாலியல் தொல்லை வழக்கில், சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துச்சென்று சிவசங்கர் பாபாவிடம் விசாரணை..! விசாரணை அழைத்துச்சென்றபோது, சாலையில் கூடியிருந்த அப்பகுதி மக்கள் கையெடுத்துக் கும்பிட்டனர்.
நீட் : உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்கமுடியாது - சென்னை உயர்நீதிமன்றம்..!
நீட் விவகாரத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்கமுடியாது - சென்னை உயர்நீதிமன்றம்..!