மேலும் அறிய

போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது

போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜாஃபர் சாதிக்கின் நிறுவனமான Coalescence Ventures என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான Sri Appu Direct என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருள்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 

ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022 – 2023 காலகட்டத்தில், தனது Coalescence Ventures நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. இதே காலகட்டத்தில்தான், Sri Appu Direct நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்துக்கான பொருள்களை வழங்கியது, ஜாஃபர் சாதிக்கின் Coalescence Ventures நிறுவனம் ஆகும்.

குறிப்பிட்ட காலகட்டத்தில், திமுக நிர்வாகியாக இருந்த ஜாஃபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 160 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளார். அவர் ஜாமின் கோரிய வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்த வழக்கில் இருத்தரப்பு வாதங்களும் முடிவுற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
Embed widget