சப்பாத்திக்கு கோதுமை மாவை வெந்நீர் சேர்த்துப் பிசையலாம். பிசையும் போதே மாவு சற்று வெந்துவிடும். பிறகு லேசாக சூடு செய்தாலே போதும், சப்பாத்தி மிருது வாக இருக்கும்.
கோதுமை மாவு பிசையும் போது சிறிதளவு பால் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும்.
எண்ணெய் மற்றும் நெய்கலந்து சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் ஒரு டேபிள்ஸ்பூன் என்ற விகிதத் தில் கலந்துவைத்துக்கொண்டால் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
சப்பாத்தி தேய்க்கும்போது மெல்லியதாக இல்லாமல் சற்று கனமாக தேய்த்தால் சப்பாத்தி மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்
சப்பாத்தி செய்து அதன் மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய்ப் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து பிறகு குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். சுவையாக இருக்கும்.
சப்பாத்தி மாவு மீதமிருந்தால் மாவின் மீது எண்ணெய் தடவி வைத்தால் கருப்பாக காய்ந்து போகாமல் இருக்கும்.
சப்பாத்தி சுடும்போது கல் சூடானதும் ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து, பிறகு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி சுட்டால் நன்றாக இருக்கும்.
சப்பாத்தியை நன்கு திரட்டி அதன் மேல் எண் ணெய் ஊற்றி நான்காக மடித்து மீண்டும் ஒரு முறை திரட்டினால் சப்பாத்தி நன்கு உப்பி வரும். மிருதுவாக இருக்கும்.